சென்னையில் சிவசேனா பிரமுகர் வெட்டிக் கொலை
சென்னை:
சென்னையில் சிவசேனா பிரமுகர் ஒருவர் நேற்று இரவு கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சென்னை-கொருக்குப்பேட்டையில் உள்ள பார்த்தசாரதி பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் தீனதயாளன் (50).
சிவசேனா கட்சியின் வடசென்னை மாவட்டத் தலைவரான தீனதயாளன் நேற்று இரவு வண்ணாரப்பேட்டைபோலீஸ் நிலையத்துக்கு அருகே உள்ள பார்த்தசாரதி மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத ஒரு கும்பல் திடீரென்று தீனதயாளனை வழிமறித்து அவரை சராமாரியாகஅரிவாளால் வெட்டி விட்டு ஓடி விட்டது.
ஏராளமான வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த தீனதயாளன் உடனடியாக சென்னைஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் அங்குஉயிரிழந்தார்.
வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வெகு அருகிலேயே இந்தப் படுகொலைச் சம்பவம் நடந்திருப்பதுஅப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழுமலை என்பவருக்கும் தீனதயாளனுக்கும் முன் விரோதம்இருந்ததாகவும் ஏழுமலையின் கூட்டாளிகள் தான் இந்தக் கொலையைச் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.போலீசாரும் இதே கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications