விரல் மூலம் உலக சாதனைக்கு தயாராகும் வாலிபர்

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்:

ஆள் காட்டி விரலால் 3 கிலோ எடையுள்ள தட்டைச் சுற்றி உலக சாதனை படைக்க திட்டமிட்டுள்ளார் திருவாரூரைச் சேர்ந்த வாலிபர்.

திருவாரூர் மாவட்டம் கங்களச்சேரி அருகேயுள்ள அதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரக்குமார். இவர் தஞ்சாவூரில் ஒருபாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். இவருக்கு சிறு வயதில் இருந்தே ஒரு பழக்கம்.

கையில் ஏதாவது கிடைத்தால் அதை எடுத்து தனது ஆள் காட்டி விரலில் வைத்து சுற்றிக் கொண்டிருப்பார். விளையாட்டாக ஆரம்பித்தஇந்தப் பழக்கம் பின்னர் வேறு மாதிரியாக மாறியது.

தொடர்ந்து பல நிமிடங்களுக்கு பொருட்களை சுற்றும் அளவுக்கு பழகி விட்டது வீரக்குமாருக்கு. இதன் மூலம் ஏதாவது சாதனை படைக்கவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வந்தது.

இதையடுத்து தட்டு ஒன்றை எடுத்து தொடர்ந்து பல நிமிடங்களுக்கு சுற்றிப் பயிற்சி மேற்கொண்டார். தற்போது 2 கிலோ எடையுள்ள ஒருதட்டை 10 மணி நேரம் விடாமல் தொடர்ந்து சுற்றுகிறார் வீரக்குமார்.

அடுத்ததாக 3 கிலோ எடையுள்ள தட்டை தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு சுற்றி உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவீரக்குமார் முயற்சி செய்து வருகிறார்.

முயற்சி திருவினையாக்கும் என்று கூறி வீரக்குமாரை வாழ்த்துவோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+