பாலன் கொலை: சசிகலாவுக்கு தொடர்பா?
சென்னை:
முன்னாள் திமுக எம்.எல்.ஏவும் பின்னர் அதிமுகவில் சேர்ந்தவருமான எம்.கே.பாலனின் கொலையில் முதல்வர் ஜெயலலிதாவின் தோழிசசிகலாவுக்குத் தொடர்பு இருப்பதாக பாலனின் மகன் மணிமாறன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் ஒரு மனுவும் தாக்கல் செய்துள்ளார். அதில், எனது தந்தை பாலனின் கொலை வழக்குத்தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள செந்தில் குமார் என்பவர் தனது வாக்குமூலத்தில் சசிகலா குறித்துக் கூறியுள்ளார். அவர் சொல்வதுஉண்மையாக இருந்தால் சசிகலாவுக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது உறுதியாகி விடும்.
ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் எனது தந்தையிடம் பணம் கொடுத்து வைத்திருந்தார். அதை மீட்பதற்காகபோலீஸாரே பாலனைக் கடத்திச் சென்றனர். அந்த சமயத்தில்தான் அவர் இறந்திருக்கிறார்.
இந்தக் கொலையில் மாநில போலீஸாரிடமிருந்து நியாயமான விசாரணையை எதிர்பார்க்க முடியாது. எனவே இந்த வழக்கை சி.பி.ஐ.விசாரிக்க கோர்ட் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மணிமாறன் தனது மனுவில் கூறியுள்ளார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஜெயசிம்ம பாபு மற்றும் பாக்கியராஜ் ஆகியோர், இந்த வழக்கில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளநடவடிக்கைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டனர்.
மேலும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் பாலனின் உடல், அவருடையதுதானா என்பதைக் கண்டறிய டி.என்.ஏ. சோதனைக்கும் கோர்ட்உத்தரவிட்டுள்ளது.
இந்தக் கொலை பல மர்ம முடிச்சுகளுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications