வட்டிகடை நடத்தி அடாவடி செய்த சப்---இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
சென்னை:
பெட்டிக் கடைக்காரருக்கு கந்து வட்டிக்குப் பணம் கொடுத்து, அவர் அதைத் திருப்பிச் செலுத்தியும் கூட அடித்து உதைத்த சப் இன்ஸ்பெக்டர்சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை எழும்பூரில் பெட்டிக் கடை வைத்திருப்பவர் ரவி. இவர் தமிழக காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்பிரிவில் சப்இன்ஸ்பெக்டராக உள்ள வெள்ளையப்பன் என்பவரிடம் ரூ. 90,000 வட்டிக்கு வாங்கியிருந்தார்.
இதற்கான வட்டி மற்றும் அசல் ஆகியவற்றை சேர்த்து மொத்தம் ரூ. 2.5 லட்சம் வரை வெள்ளையப்பனிடம் திருப்பிச் செலுத்தியுள்ளார்.
இருப்பினும் கூடுதலாக பணம் கேட்டு ரவியை அடித்து உதைத்துள்ளார் கந்து வட்டி வெள்ளையப்பன்.
இதையடுத்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார் ரவி. இதையடுத்து விசாரணை திடத்தப்பட்டு வெள்ளையப்பன்சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மேலும் இதுபோல கந்து வட்டிக்குப் பணம் கொடுக்கும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் கமிஷனர் விஜயக்குமார்உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் போலீசார் பலரும் வட்டிக்கு பணம் விட்டு வருகின்றனர். வசூலிக்கும் மாமூலை இப்படி வட்டிக்கு விட்டு பல மடங்காக்கிவருகின்றனர். வழக்கமாக இவர்களின் மனைவி, மைத்துனர்கள் மூலமாக வட்டிக்கு விட்டு வசூலித்து வருகின்றனர்.
அதே போல தமிழத்தில் பெரும்பாலான ஆட்டோக்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு சொந்தமானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications