இந்தியாவின் கோரிக்கைளை நிராகரித்தது பாகிஸ்தான்
அலமாட்டி (கஜாகிஸ்தான்):
தீவிரவாதிகளை அனுப்புவதை நிறுத்தினால் தான் பேச்சுவார்த்தைக்குத் தயார் என இந்தியா கூறியுள்ளதைபாகிஸ்தான் ஏற்க மறுத்துள்ளது.
பேச்சுவார்த்தை நடத்த இந்தியா எங்களுக்கு எப்படி நிபந்தனை விதிக்க முடியும் என பாகிஸ்தான்வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சத்தார் கஜாகிஸ்தானில் நிருபர்களிடம் கூறினார்.
அவர் கூறுகையில்,
இந்தியா சில நிபந்தனைகளை (தீவிரவாதிகளை தடுப்பது) கூறி பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறது. இதுஏற்கத்தக்கது அல்ல. அதே நேரத்தில் 20 தீவிரவாதிகளை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்துவேண்டுமானால் பேசலாம் என்றார்.
இன்னொரு யோசனையும் நிராகரிப்பு:
எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை இரு நாட்டு ராணுவத்தினரும் இணைந்து கண்காணிக்கலாம் எனஇந்தியா தெரிவித்த யோசனையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.
முதலில் இது நல்ல யோசனை என்று கூறிய பாகிஸ்தான் இதை உடனடியாக ஏற்க முடியாது, இந்தியாவுடன்பேச்சுவார்த்தை நடத்தும்போது இது குறித்தும் விவாதிக்கத் தயார் என்றது.
ஆனால், இப்போது அந் நாட்டின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லைப் பகுதியை ஐ.நா. படையைக்கொண்டு கண்காணிக்கலாம் என அந் நாட்டின் சிறப்புத் தூதர் நிஜாமுதீன் சிங்கப்பூரில் தெரிவித்தார்.
ஆனால், மலைப்பாங்கான பகுதியை நன்கு அறிந்த இந்திய, பாகிஸ்தான் வீரர்களால் தான் இதை சிறப்பாகக்கண்காணிக்க முடியும், ஐ.நா. அதிகாரிகளால் கண்காணிப்பில் ஈடுபட முடியாது என இந்தியா கூறிவிட்டது.
ஏற்கனவே காஷ்மீரிலும் பாகிஸ்தான் பகுதியிலும் 44 ஐ.நா. ராணுவ பார்வையாளர்களம், 23 பிற கண்காணிப்புஊழியர்களும் இருந்தும் தீவிரவாதிகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க முடியவில்லை என்று இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.
தாக்கப்பட்ட தூதரக ஊழியர் வெளியேற்றம்:
இஸ்லாமாபாத்தில் ஐ.எஸ்.ஐயால் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட இந்திய தூதரக ஊழியர் குல்வந்த் சிங்கைபாகிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.
தாக்குதலில் இடுப்பு எலும்பு முறிந்த அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த பாகிஸ்தான் பின்னர் அவரைஇந்தியாவுக்கு கொண்டு செல்லவும் தடை விதித்தது. இதனால் அவர் காரிலேயே நடுரோட்டில் நிறுத்திவைக்கப்பட்டார்.
இதையடுத்து அவரை நாட்டை விட்டு வெளியேற்றுவதாகக் கூறி இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது பாகிஸ்தான்.
அம்ரிஸ்தரில் வாஹ் எல்லை வழியாக காரில் இந்தியா வந்த அவர் ஸ்டிரச்சர் மூலம் ஆம்புலன்சுக்கு மாற்றப்பட்டுஅங்கிருந்து விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்டார். முன்னதாக அவருக்கு ஆம்புலன்ஸ் தரவும்பாகிஸ்தான் மறுத்தது. இந்தியா அனுப்பிய ஆம்புலன்சையும் அனுமதிக்கவில்லை.
இதனால் உடைந்த எலும்புடன் அவர் படுத்த படுக்கையாக இந்தியாவுக்கு காரில் கொண்டு வரப்பட்டார். இந்தியஎல்லையை அடைந்தவுடன் அவரது மனைவி கமலா கதறி அழுதார். அவர்களின் இரு குழந்தைகளும் அழுதன.
உடைந்து போன குரலில் பேசிய குல்வந்த் சிங், என்னை 6 பேர் கடத்திச் சென்று விலங்கு மாட்டி சித்திரவதைசெய்தனர். ஏதோ ஆவணங்களைக் கேட்டனர். என்னிடம் இல்லை என்று கூறினேன். இதையடுத்து பயங்கரஆயுதங்களால் தாக்கினர் என்றார்.
அவருக்கு டெல்லியில் முழு அளவில் சிகிச்சை தர மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நடுநிலை:
இந்தியா- பாகிஸ்தான் மோதலில் ஆப்கானிஸ்தான் நடுநிலை வகிக்கும் என அந் நாட்டு வெளியுறவுத்துறைஅமைச்சர் டாக்டர் அப்துல்லா அப்துல்லா கூறியுள்ளார்.
நியூயார்க் டைம்ஸ்சுக்கு இந்தியா கண்டனம்:
பாகிஸ்தானுடனான விவகாரத்தில் இந்தியத் தலைவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை என்று நியூயார்க்டைம்ஸ் பத்திரிக்கையில் கடந்த 4ம் தேதி தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம்தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு கண்டனம் தெரிவித்துகடிதம் அனுப்பியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications