எல்லையை கண்காணிக்க அமெரிக்க- பிரிட்டன் படை?
இஸ்லாமாபாத்:
இந்தியாவுடன் போர் நடத்த பாகிஸ்தான் விரும்பவில்லை என அந் நாட்டு ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ்முஷாரபுடன் பேச்சு நடத்திய அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் கூறினார்.
முன்னதாக முஷாரபை சந்தித்த அவர் தீவிரவாதிகளை ஒடுக்க எல்லா நடவடிக்கைகளையும் எடுக்குமாறுவலியுறுத்தினார். தீவிரவாதிகள் ஊடுருவிக் கொண்டிருப்பது அமெரிக்காவுக்கு நன்றாவே தெரியும் என அவர்முஷாரபிடம் கூறியதாகத் தெரிகிறது.
45 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பின்போது முஷாரபுக்கு ஆறுதல் வார்த்தைகள் ஏதும் அமெரிக்காவிடம்இருந்து கிடைக்கவில்லை. இந்தியாவுடன் போர் வந்தால் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள படைகளை நீங்கள்இந்தியா பக்கம் அனுப்ப வேண்டி வரும்.
இதனால் அல்-காய்தா, தலிபான் தீவிரவாதிகளின் அட்டகாசம் மீண்டும் அதிகரிக்கும். இதை அமெரிக்காவிரும்பவில்லை என தனது நாட்டின் நிலையை அவர் விளக்கியதாகத் தெரிகிறது.
முஷாரபை சந்தித்துவிட்டு நிருபர்களிடம் பேசிய ஆர்மிடேஜ், அமைதியை தேடுவதாக முஷாரப் சொல்கிறார்.போரை நான் முதலில் ஆரம்பிக்க மாட்டேன் என்று உறுதி தந்தார். மற்றபடி என்ன பேசப்பட்டது என்பதைவிளக்குவதற்கில்லை என்றார்.
நாளை ஆர்மிடேஜ் இந்தியா வருகிறார்.
தொடர்கிறது லஷ்கர் ஊடுருவல்:
பாகிஸ்தானில் இருந்து தொடர்ந்து இந்தியாவுக்குள் ஊடுருவோம், இந்திய ராணுவத்தின மீது தொடர்ந்து தாக்குதல்நடத்துவோம் என லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த அமைப்பின் மூத்த தலைவன் அப்துல் ரஹ்மான் மெக்கி ஒரு உருது நாளிதழுக்கு அளித்த பேட்டியில்,
முஷாரபின் கட்டுப்பாட்டில் நாங்கள் இல்லை. முஷாரபைப் போல நெருக்குதலுக்கு பணிந்து ஆண்மை இழக்கமாட்டோம். அடுத்த சில நாட்களில் இந்திய ராணுவ வாகன அணிவகுப்புகள் மீது பெரும் தாக்குதல் நடத்தஉத்தரவிட்டுள்ளோம்.
எங்களது தகவல் தொடர்பு கூடாரங்களை ராணுவம் அழித்து வருகிறது. எங்கள் தலைவர்களை அழைத்துதாக்குதலை நிறுத்த சொல்கிறார்கள். வெளியில் தலை காட்ட வேண்டாம் என்கிறார்கள்.
எங்கள் முகாம்களை முஷாரப் மூடிவிட்டார். இந்த முகாம்கள் மூடப்பட்டதை பல வெளிநாட்டு தூதரகஊழியர்களுக்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் காட்டி வருகின்றனர்.
ஆனால், முஷாரப் எங்களை அடக்கிவிட முடியாது. அவரது கட்டுப்பாடுகளால் எங்கள் ஆட்களின் மன பலம்குறைந்து போய் இருப்பது உண்மை தான். ஆனால், தாக்கும் திறனை இழக்கவில்லை என்றான்.
பாக். அமைச்சர் பதவி விலக விருப்பம்:
இதற்கிடையே பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரும், மதத் தீவிரவாத்தை முழுமையாகஆதரிக்காதவருமான பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சத்தார் பதவி விலகி விட விருப்பம்தெரிவித்துள்ளார்.
உடல் நிலையை காரணம் காட்டி அவர் பதவி விலக விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், முஷாரப் இந்தவிஷயத்தில் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிகிறது.
கலிபோர்னியா பல்கலை. திட்டம் ரத்து:
இந்திய-பாகிஸ்தான் இடையே போர் வரும் சூழல் இருப்பதால் கலிபோர்னியா பல்கலைக்கழகம் தனது இந்தியக்கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது.
இந்தத் திட்டத்தின்படி அமெரிக்காவின் கோடை விடுமுறையில் 15 மாணவர்கள் டெல்லி, ஹைதராபாத் ஆகியஇடங்களுக்கு வெளிநாட்டுக் கல்விக்காக மாணவர்கள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டுஇந்தக் கல்வித் திட்டத்தை பல்கலைக்கழகம் ஒத்தி வைத்துவிட்டது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications