மக்கள் ஆதரவு எங்களுக்கே: ஜெயலலிதா
சென்னை:
சைதாப்பேட்டை உள்ளிட்ட 3 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளதன் மூலம் எங்கள் அரசை மக்கள்முழுமையாக ஆதரிக்கிறார்கள் என்பது உறுதியாகிவிட்டதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:
சைதாப்பேட்டை வெற்றி மிக இனிப்பானது. மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் எங்கள் அரசுநடந்து கொள்ளும். அரசுக்கு மக்கள் தந்த அங்கீகாரம் தான் இந்த வெற்றிகள்.
சைதாப்பேட்டையில் மிகவும் அவசரப்பட்டு மறு தேர்தலை தேர்தல் கமிஷன் அறிவித்தது.
3 தொகுதிகளிலும் தேர்தலை திடீரென கமிஷன் அறிவித்தது. இதனால் நாங்கள் பட்ஜெட் கூட்டத் தொடரைக் கூடஉடனடியாக முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததால் பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களுக்கு தந்த உறுதி மொழிகளைக் கூட நிறைவேற்ற முடியவில்லை.
இந்தத் தேர்தல்களை ஒத்தி வைக்குமாறு நாங்கள் தேர்தல் கமிஷனிடம் கூறினோம். ஆனால், அதை அவர்கள்ஏறகவில்லை. இந்தத் தேர்தல் காரணமாகவும், தேர்தல் விதிகள் காரணமாகவும் அரசே செயல்படாமல் போனது.
கருணாநிதி மீது பாய்ச்சல்:
சைதாப்பேட்டையில் எங்கள் வெற்றியை தாமதப்படுத்தத் தான் திமுகவால் முடிந்ததே தவிர வெற்றியைப் பறிக்கமுடியவில்லை.
மறு தேர்தல் நடத்தப்பட்ட இடங்களில் திமுகவை விட அதிமுக 942 வாக்குகள் அதிகம் வாங்கியுள்ளது.
அதிமுக வெற்றி பெறுவதை ஜீரணிக்கும் மன தைரியம் கருணாநிதிக்கு இல்லை.
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications