திமுக தோற்றது ஏன்?
சென்னை:
எங்களின் எஃகுக் கோட்டை என்று திமுகவினரால் வர்ணிக்கப்பட்டு வந்த சைதாப்பேட்டையில் அக் கட்சியின் வேட்பாளர்மா.சுப்ரமணியம் பெரும் தோல்வியடைந்துள்ளார்.
சைதாப்பேட்டையில் திமுகவின் சார்பில் யாரை நிறுத்தினாலும் கண்ணை மூடிக் கொண்டு அவர் ஜெயிப்பார் என்ற அசாத்திய நம்பிக்கைதிமுகவினரிடம் எப்போதுமே உண்டு.
சென்னையின் பெரும்பாலான தொகுதிகளில் திமுகதான் எப்போதுமே வென்று வந்தது. ஆனால், சமீப காலமாக சென்னையை அதிமுகவும்கைப்பற்ற ஆரம்பித்துள்ளது. ஆனால், சைதாப்பேட்டை தொகுதி கருணாநிதியை 2 முறை சட்டமன்றத்துக்கு அனுப்பிய தொகுதி. இதனால்இந்தத் தொகுதி மீது திமுகவினருக்கு எப்போதும் எமோஷனல் டச் உண்டு.
அப்படி இருந்தும் சைதையில் தோல்வியடைந்திருப்பது திமுகவுக்கு குறுப்பாக கருணாநிதிக்கு பெரும் அரசியல் இழப்பாகக்கருதப்படுகிறது.
கடந்த பொதுத் தேர்தலில் திமுக சார்பில் இங்கு போட்டியிட்ட வை.பெருமாள் பெற்ற வாக்குகள் 62,118. அவரை எதிர்த்து அதிமுககூட்டணியுடன் போட்டியிட்டுத் தோற்ற பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி.ஆர்.பாஸ்கரன் பெற்ற வாக்குகள் 58,237.
இப்போதுநடந்த முடிந்த தேர்தலில் பா.ம.க. கூட்டணியுடன் திமுக பெற்றுள்ள வாக்குகள் 53,943. அவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள அதிமுகவின் ராதாரவி பெற்றுள்ள வாக்குகள் 65,868.
கடந்த முறை பெற்ற வாக்குகளைக் கூட திமுக இந்த முறை பெறவில்லை. மேலும், கடந்த முறை அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றிருந்தது. அப்படியிருந்தும் அது தோல்வியுற்றது.
ஆனால் இந்த முறை அதிமுக தனித்துப் போட்டியிட்டது. அப்படி இருந்தும் கடந்த முறை பெற்ற வாக்குகளைக் கூட திமுக பெறாமல் போயுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த முறை திமுக வேட்பாளர் பெருமாள் வெறும் 3881 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார். ஆனால் இப்போது நடிகர்ராதாரவி 11,000 ஓட்டுக்களுக்கும் மேலான வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தோல்விக்கு காரணங்கள்:
இந்தத் தோல்வி குறித்து பல காரணங்கள் கூறப்படுகின்றன.
1. திமுக சார்பில் சரியான வேட்பாளர் நிறுத்தப்படவில்லை. ராதாரவி என்ற பெரிய வேட்பாளருக்கு எதிராக மிகச் சாதாரணமான மா.சுப்ரமணியத்தைநிறுத்தியதை மிகப் பெரும் தவறு என்று திமுகவினர் வர்ணிக்கிறார்கள்.
2. திமுக சார்பில் தீவிரமான பிரசாரம் மேற்கொள்ளப்படவில்லை என்பது மற்றொரு குற்றச்சாட்டு. மாறாக அதிமுகவினரோ சைதையின் மூலைமுடுக்கெல்லாம் சென்று பிரசாரம் செய்தனர். திமுகவினர் இது தங்களது கோட்டை என்ற மமதையில் இருந்து விட்டனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
3. அதிமுகவினர் அதிக அளவில் கள்ள ஓட்டுக்கள் போட்டுள்ளனர். மேலும், தொகுதி முழுவதும் மீண்டும் மறு வாக்குப் பதிவு நடந்திருந்தால் நிச்சயம் திமுகவெற்றி பெற்றிருக்கும் என்று திமுகவினர் கூறுகின்றனர்.
4. பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்குகள் முழுமையான அளவுக்கு திமுகவுக்குக் கிடைக்கவில்லை. மேலும் இத் தொகுதியில் உள்ள பா.ஜ.கவின்ஓட்டுக்களும் கிடைக்கவில்லை. இதுவும் தோல்விக்கு ஒரு காரணம்.
கம்யூனிஸ்ட்களை கூட்டணில் சேர்க்காதது, மதிமுக உள்ளிட்ட சிறு சிறு கட்சிகளை கூட்டணியை விட்டு விரட்டியது ஆகியவையும் முக்கிய காரணங்களாக திமுகதொண்டர்கள் கருதுகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications