பெங்களூரில் ரணில்: சாய்பாபாவை சந்திக்கிறார்
பெங்களூர்:
இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று இந்தியா வருகிறார். தனது பயணத்தை அவர் பெங்களூரில்இருந்து துவக்குகிறார். பெங்களூரில் அவர் 2 நாட்கள் தங்கியிருப்பார்.
அவரது வருகையையொட்டி பெங்களூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று மாலை சிறப்பு விமானத்தில் பெங்களூர் வரும் அவர் நாளை ஒயிட்பீல்டில் உள்ள சத்யசாய் ஆஸ்ரமத்துக்குச்சென்று சாய்பாபாவைச் சந்தித்து ஆசி பெறுகிறார்.
பின்னர் இன்போசிஸ், விப்ரோ, எலெக்ட்ரானிக் சிட்டி ஆகிய இடங்களுக்குச் செல்கிறார்.
இரவில் ஆளுநர் ரமாதேவி அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார். திங்கள்கிழமை அவர் டெல்லி புறப்பட்டுச்செல்வார்.
அவரது வருகையையொட்டி பெங்களூரில் இன்றும் நாளையும் பல இடங்களில் போக்குவரத்து மாறுதல்களும்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் பிரதமர் வாஜ்பாய், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோரை சந்தித்துப் பேச்சுநடத்திவிட்டு அவர் சென்னை வழியாக இலங்கை திரும்புவார்.
அவர் சென்னையில் இருக்கும்போது முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் இருப்பார். இதனால், இருவரும் சந்தித்துப்பேச வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications