தேர்தல் தோல்வி: அறிவாலயத்தில் கருணாநிதி தீவிர ஆலோசனை
சென்னை:
சட்டசபைத் தேர்தல் முடிவுகள் திமுகவுக்குப் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது.
இந்தத் தோல்வி குறித்து அண்ணா அறிவாலயத்தில் அவர் திமுக தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். ஸ்டாலின், பொன்முடி,பரிதி இளம்வழுதி, சாத்தூர் ராமச்சந்திரன், தென்சென்னை மாவட்டத் தலைவர் கிட்டு, வட சென்னை மாவட்ட திமுக தலைவர் பலராமன்,தேர்தல் பொறுப்பாளர்கள் ஆகியோருடன் சுமார் 2 மணி நேரம் கருணாநிதி தீவிர ஆலோசனை நடத்தினார்.
இதில் கிட்டுவுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களுக்கும் கருணாநிதி ரெய்ட் விட்டதாகக் கூறப்படுகிறது.
இக்கூட்டம் முடிந்த பின் திமுகவின் முக்கியத் தலைவர்களின் ஒருவர் நம்மிடம், தேர்தல் தோல்வி குறித்து திமுக தலைவர் மிகவும் அப்செட்ஆகியுள்ளார் என்றார்.
அவரே திமுகவில் இப்போதைய நிலை குறித்து விளக்கினார். அவரிடம் பேசியதில் இருந்து தெரிந்த விவரங்கள்:
உறுதியான தலைவர்கள், தொண்டர்கள் இல்லாத கட்சிகளுடன் உறவு கொண்டிருப்பதை விட்டுவிட்டுக்கும் இனிமேலாவது தனது பழையதோழர்களான கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் மீண்டும் கூட்டணி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என திமுகவின் தீவிர தொண்டர்கள்எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
அச்சிரப்பாக்கம், வாணியம்பாடி மற்றும் சைதாப்பேட்டை தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் அச்சிரப்பாக்கத்தில் பாமகவும், மற்றஇரு தொகுதிகளில் திமுகவும் கடும் தோல்வியைத் தழுவின.
வாணியம்பாடியில் தோல்வியுற்றது கூட பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் இத்தனை காலமாக கட்டிக் காத்து வந்த சைதாப்பேட்டையில்தோற்றதுதான் திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
அதிமுகவினர் கள்ள ஓட்டுக்கள் போட்டார்கள், முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்று வைத்துக் கொண்டால் கூட 11,000 வாக்குகள்வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றிருப்பதை தொண்டர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
கோட்டை என்று கூறப்பட்டு வரும் தொகுதியில் 11,000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் திமுக தோற்றிருப்பது தொண்டர்களுக்கு பெரும்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் கொள்கைகளும், தலைவர்களின் அணுகுமுறைகளும் தவறாக இருப்பதையே இது காட்டுவதாகதொண்டர்கள் குமுறுகிறார்கள்.
ஒரு கட்சிக்காக (பாமக) கூட்டணியில் இருந்து வந்த சில கட்சிகளை (விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம்) கருணாநிதிவெளியேற்றியிருக்கக் கூடாது. மதிமுகவை எப்பாடு பட்டாவது தக்க வைத்திருக்க வேண்டும்.
தேசிய அளவில் மட்டுமே பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசியிருக்கக் கூடாது என்று திமுக தொண்டர்கள்மத்தியில் பெருமளவில் பேச்சு அடிபடுகிறது. தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறும் பாட்டாளி மக்கள் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டதுமாபெரும் வரலாற்றுத் தவறு என்றும் தீவிர திமுக தொண்டர்கள் கோபத்துடன் கூறுகிறார்கள்.
சைதை தொகுதியைப் பொருத்தவரை திமுக தேர்தல் பணிக்குழுவினர் சரிவர பணியாற்றவில்லை என்ற புகாரும் உள்ளது.
இத் தொகுதியின் திமுக முக்கியஸ்தரான சைதை கிட்டுவும் மிக அமைதியாக இருந்தார். கட்டப் பஞ்சாயத்து, அடிதடி என பிரபலமான இவர்திமுகவிரைத் தாக்கிய அதிமுகவினரை தனது ஆட்களைக் கொண்டு தட்டிக் கேட்கவில்லை. சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்த இவரைதினகரனும் அமைச்சர் பன்னீர்செல்வமும் அமைதிப்படுத்தி வைத்துவிட்டதாக திமுகவிரிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கிட்டு போன்ற தொகுதியில் பிரபலங்ககளை தேர்தல் முடியும் வரை பார்க்கவே முடியவில்லை என்று தொண்டர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.அவர்கள் மட்டும் தீவிரமாக பணியாற்றியிருந்தால் நிச்சயம் திமுக வெற்றி பெற்றிருக்கும், அதிமுகவும் இப்படி முறைகேடுகளில்ஈடுபட்டிருக்க முடியாது என்று திமுகவினர் அடித்துக் கூறுகிறார்கள்.
திமுக தொண்டர்கள் மத்தியில் இன்னும் சில யோசனைகளும் கூறப்படுகின்றன. பாரதீய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய மதவாத,ஜாதிவாத கட்சிகளுடன் உள்ள கூட்டணியை திமுக துண்டித்துக் கொள்ள வேண்டும். மதிமுக தலைவர் வைகோவை சமாதானப்படுத்திமுடிந்தால் மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும் இல்லாவிட்டால் மதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும்.
மாறனை மந்திரியாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக பா.ஜ.கவுடன் உறவைத் தொடர்வது வேஸ்ட் என்கின்றனர் தொண்டர்கள்.
இதை விட முக்கியமாக திமுகவின் உண்மையான தோழனாக கடைசி வரை விளங்கிய இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் மீண்டும்கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும்.
திமுகவும், கம்யூனிஸ்ட் இயக்கங்களும் ஒரே கொள்கை உடையவை. இரு கட்சிகளின் தொண்டர்களும் தீவிர மனப்பான்மைகொண்டவர்கள். வெற்றிக்காக கடுமையாக உழைக்கக் கூடியவர்கள், போராட்ட மனம் மிக்கவர்கள்.
எனவே திமுகவுக்கு சரியான தோழர்களாக கம்யூனிஸ்டுகள் மட்டுமே இருப்பார்கள். கடந்த காலங்களில் திமுகவுக்கு பலவிதங்களில்கம்யூனிஸ்டுகள் கை கொடுத்ததை திமுகவினர் எண்ணிப் பார்த்து ஏக்கப்படுகின்றனர்.
ஆனால், பா.ஜ.கவுடன் கூட்டணி இருக்கும்வரை திமுகவுடன் சேர மாட்டோம் என இரு கம்யூனஸ்ட் கட்சிகளும் தெரிவித்துவிட்டன.
தொண்டர்களின் மன ஓட்டத்தைப் புரியாதவர் அல்ல கருணாநிதி. தேர்தல் தோல்வி கொடுத்த பாடங்களை கண்டிப்பாக அவர் ஆய்வுசெய்து அதிரடி முடிவெடுப்பார் என்று தொண்டர்கள் நினைக்கின்றனர்.












Click it and Unblock the Notifications