பிறந்தா என்ன? இறந்தா என்ன?
தாராபுரம்:
பிறப்பு சான்றிதழுக்குப் பதிலாக இறப்புச் சான்றிதழ் கொடுத்து சிறப்பான கடமையாற்றியுள்ளார் தாசில்தார்.
குளித்தலையைச் சேர்ந்த குணசேகரன். இவரது மனைவி விஜயலட்சுமி. இருவரும் சுத்தமாக எழுதப் படிக்கத்தெரியாதவர்கள். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். 89ம் ஆண்டில் பிறந்த தங்கள் மகனுக்கு பிறப்பு சான்றிதழ்வாங்க 2000ம் ஆண்டில் கிருஷ்ணராயபுரம் தாசில்தார் அலுவலகம் சென்றனர்.
இவர்களிடம் தங்களது வழக்கமான வசூலை முடித்த தாசில்தார் அலுவலக ஊழியர்கள் பின்னர் சான்றிதழைஅவர்களே பூர்த்தி செய்து தந்தனர்.
இந்தத் தம்பதி தங்கள் மகனுக்கு பிறப்பு சான்றிதழ் கேட்க அந்த ஊழியர்கள் இறப்பு சான்றிதழ் படிவத்தை பூர்த்திசெய்தனர். இறப்புச் சான்றிதழ் தரும்போது அதற்கான மருத்துவமனையின் ஆதாரத்தை சரிபார்க்க வேண்டும்.
ஆனால், லஞ்சம் தான் கொடுத்துவிட்டார்களே.. அவர்களை ஏன் சிரமப்படுத்த வேண்டும் என்ற நல்ல மனசுடன்சரிபார்க்கும் விஷயத்தை எல்லாம் ஒதுக்கிவிட்டு அவர்களாகவே, குழந்தை அரசு மருத்துவமனையில் இறந்ததுஎன்று எழுதிக் கொண்டனர்.
இதையடுத்து சான்றிதழை தயார் செய்து தாசில்தாரின் கையெழுத்துடன் இவர்களிடம் தந்தனர்.
சுத்தமான கைநாட்டுகளான அந்தத் தம்பதி அதை பிறப்புச் சான்றிதழாக நினைத்து பத்திரப்படுத்தி வைத்திருந்தனர்.
தங்கள் மகனுக்கு முத்துக்குமார் என்று பெயரிட்டனர். அவனும் வளர்ந்து 13 வயதை எட்டிவிட்டான். எதேச்சையாககண்ணில் பட்ட அந்த சான்றிதழைப் பார்த்த அவன் அதிர்ச்சியடைந்தான்.
அப்பா நான் செத்துப் போயிட்டதா ஏன் சர்டிபிகேட் வாங்கி வச்சுருக்க? என்று அவன் கேட்ட பிறகு தான் இந்தவிவகாரமே வெளியில் வந்துள்ளது.
தாசில்தார்கள் அலுவலகம் தான் ஊழலின் ஊற்றுக் கண் என்று சமீபத்தில் நாம் எழுதியிருந்தோம். அது மீண்டும்நிரூபணமாகிவிட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications