வாஜ்பாயைச் சந்திக்கிறார் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்
டெல்லி:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லையில் நிலவி வந்த பதற்றம் தணிந்துள்ளது தங்களுக்கு மிகவும்திருப்தி அளிப்பதாக அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் கூறினார்.
கடந்த வாரம் அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் இந்தியாவுக்கும்பாகிஸ்தானுக்கும் வந்து சென்றதைத் தொடர்ந்து எல்லையில் நிலவி வந்த கடுமையான பதற்றம் வெகுவாகத் தணியஆரம்பித்தது.
அதன் விளைவாக இந்திய வான் பகுதியில் பாகிஸ்தானின் விமானங்கள் பறக்க இந்தியா விதித்திருந்த தடைசமீபத்தில் நீக்கப்பட்டது.
மேலும் பாகிஸ்தானை கடல் வழியாகத் தாக்குவதற்காக குஜராத்தின் கட்ச் வளைகுடாவில் நிறுத்தப்பட்டிருந்தஇந்தியப் போர்க் கப்பல்களும் நேற்று மாலை திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்டன. அந்தக் கப்பல்கள் தற்போதுமும்பைக்கும் இதர துறைமுகங்களுக்கும் திரும்பிக் கொண்டிருக்கின்றன.
தற்போதைக்கு எல்லையில் பதற்றம் தணிந்திருந்தாலும் பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப்தீவிரவாதிகளை முழுமையாக ஒடுக்குவாரா என்பது சந்தேகம் தான் என்று வாஷிங்டனில் ஆர்மிடேஜ் நேற்றுதெரிவித்தார்.
இந்நிலையில் எல்லைப் பதற்றத்தை மேலும் தணிக்கும் விதமாக ரம்ஸ்பீல்ட் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும்பயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று இரவு டெல்லி வந்து சேர்ந்த ரம்ஸ்பீல்ட் இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசை சந்தித்துசுமார் ஒன்றரை மணி நேரம் பேசினார்.
எல்லையில் பதற்றம் தணிவதற்காக இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தங்களுக்கு மிகவும் திருப்திஅளித்துள்ளதாகவும் இதற்காக இந்திய அரசைப் பாராட்டுவதாகவும் பின்னர் நிருபர்களிடம் ரம்ஸ்பீல்ட் கூறினார்.
தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ் மிஷ்ராவையும் சந்தித்த ரம்ஸ்பீல்ட் இன்று பிற்பகல் பிரதமர்வாஜ்பாயையும் சந்திக்கவுள்ளார்.
எல்லையில் குவிக்கப்பட்டுள்ள ஏராளமான இந்திய ராணுவத்தினரை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்என்று வாஜ்பாயிடம் ரம்ஸ்பீல்ட் கேட்டுக் கொள்ளவுள்ளார்.
இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இரவே ரம்ஸ்பீல்ட் நேராகப் பாகிஸ்தான் சென்று அந்நாட்டுத்தலைவர்களிடமும் பேச்சு நடத்தவுள்ளார்.
எப்போது வேண்டுமானாலும் எந்தக் காரணத்துக்காகவும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே திடீரென்றுபோர் வந்து விடும் என்று அமெரிக்கா இன்னும் பயந்து கொண்டு தான் உள்ளது.
எனவே எல்லையில் தீவிரவாதிகளின் ஊடுருவலைக் கண்காணிப்பதற்காக எவ்வாறெல்லாம் ராணுவத்தினரைக்குவிக்கலாம் என்பது பற்றிய ஒரு திட்டத்தையும் இந்திய-பாகிஸ்தான் தலைவர்களிடம் ரம்ஸ்பீல்ட் எடுத்துக்கூறுவார் என்று தெரிகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications