கோட்டையில் தலைகீழாக பறந்த தேசியக் கொடி
சென்னை:
தமிழக அரசின் தலைமைச் செயலகமான ஜார்ஜ் கோட்டையில் நேற்று தேசியக் கொடி தலைகீழாகக் பறந்தது.
ராணுவத்துக்குச் சொந்தமான ஜார்ஜ் கோட்டையை தமிழக அரசின் பொதுப் பணித்துறை தான் பராமரித்துவருகிறது.
வழக்கமாக இங்கு காலையில் தேசியக் கொடி ஏற்றப்படும். மாலையில் இறக்கப்படும். மூன்று இடங்களில் தேசியக்கொடி பறக்கும்.
ராணுவ அதிகாரி தான் இந்தக் கொடியை ஏற்றுவார். நேற்றும் கொடி ஏற்பட்டது. ஆனால், தலைகீழாக. இதையாரும் கவனிக்கவும் இல்லை.
கொடியேற்றம் முடிந்துவிட்டது. 12 மணியவில் தான் இதை சில பொது மக்கள் கவனித்தனர். உடனே அங்கிருந்தபோலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் அதிகாரிகளிடம் ஓடினர். அவர்கள் ராணுவத்தினரை தொடர்பு கொண்டுஅழைத்தனர்.
ராணுவத்தினர் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி வந்து கொடியை இறக்கினர். பின்னர் மீண்டும் சரி செய்து பறக்கவிட்டனர்.
தமிழகத்தில் எல்லாமே தலைகீழாகவே நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications