வருமான வரித்துறை அதிகாரிகள் வீட்டில் சி.பி.ஐ. ரெய்ட்
டெல்லி:
நாடு முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் வீட்டில் சி.பி.ஐ. ரெய்ட் நடத்தி வருகிறது.
பல மூத்த அதிகாரிகளும் முறைகேடாக கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்திருப்பதையடுத்து இந்த ரெய்ட்நடக்கிறது.
நேற்று இரவில் தொடங்கிய இந்த ரெய்ட் இன்றும் தொடர்ந்தது. இதுவரை நாடு முழுவதும் 66 இடங்களில் சி.பி.ஐ.ரெய்ட் நடத்தப்பட்டுள்ளது.
இதில் ஹைதராபாத் வருமான வரித்துறை கமிஷ்னரின் வீடும் தப்பவில்லை. அவரது வீட்டில் நடத்தப்பட்டசோதனையில் ரூ. 1.5 கோடி பணம் பிடிபட்டது. வீட்டிலேயே இவர் இவ்வளவு பணத்தை வைத்திருந்தார்.அவரிடம் பல விதமான கார்களும் உள்ளன. அவையும் முடக்கப்பட்டன.
ரூ.77 லட்சம் மதிப்புள்ள ஷேர் பத்திரங்கள், ரூ. 22 லட்சம் மதிப்புள்ள நகைகளும் பிடிபட்டன.
ராஜஸ்தானில் நடந்த அதிரடி சோதனைகளில் ஜெய்ப்பூர் வருமான வரித்துறை இணை கமிஷ்னர் வர்மா சிக்கினார்.இவரது வீட்டில் ரூ. 22 லட்சம் பணமும், நகைகள், முதலீட்டு பத்திரங்கள் பிடிபட்டன. இவரிடமும் வகைக்கு ஒருகார் உள்ளது. இரு பங்களாக்கள் உள்ளன.
ஐ.ஆர்.எஸ். அதிகாரியான இவரது வருமானத்துக்கும் இவரிடம் உள்ள சொத்துக்களுக்கும் ஏணி வைத்தாலும்எட்டாது என சி.பி.ஐ. தெரிவித்துள்ளன.
நாய்களுக்கு ஏ.சி. கூண்டு:
வர்மாவின் வீட்டில் 6 நாய்கள் உள்ளன. இந்த நாய்களுக்கு ஏ.சி. செய்யப்பட்டு 6 கூண்டுகளை வைத்துள்ளார்.இதைப் பார்த்த சி.பி.ஐ. அதிகாரிகள் வாயடைத்துப் போய்விட்டனர்.
அதே போல சண்டிகரில் உள்ள எண்ணெய் வளத்துறையின் தலைவர் வீட்டிலும் சோதனை நடந்தது.
சென்னை தொலைத் தொடர்புத்துறையைச் சேர்ந்த சில அதிகாரிகளின் வீட்டில் சோதனை நடந்துள்ளதாகத்தெரிகிறது. ஆனால், அந்த விவரங்கள் கிடைக்கவில்லை.
கடந்த 3 மாதங்களில் சி.பி.ஐ. நடத்தியுள்ள 2வது மிகப் பெரிய சோதனை இது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications