தமிழகத்துக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு கஞ்சத்தனம்: இன்று டெல்லியில் ஜெ. விவாதிப்பார்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
தமிழகம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதால் மத்திய அரசிடம் ரூ. 3,000 கோடி நிதியுதவி கேட்க அவர் திட்டமிட்டுள்ளார்.
தமிழக முதல்வராக 3-வது முறையாக பதவியேற்ற பிறகு இதுவரை முதல்வர் ஜெயலலிதா டெல்லி செல்லவில்லை. பல்வேறுகாரணங்களினால் அவரது பயணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.
செவ்வாய்க்கிழமை அவர் டெல்லி செல்வதாக இருந்தது. ஆனால் இலங்கைப் பிரதமர் சென்னை வந்ததால் அவர் தனது பயணத்தைபுதன்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
இந் நிலையில் புதன்கிழமை அவர் டெல்லி செல்கிறார். டெல்லியில் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் கே.சி.பந்த்துடன், தமிழகத்திற்கானநிதி ஒதுக்கீடு குறித்துப் பேசுகிறார். மேலும், பிரதமர் வாஜ்பாய், அமைச்சர் அத்வானி ஆகியோரையும் ஜெயலலிதா சந்தித்துப் பேசுவார்.
ஜெயலலிதாவுக்கு முன்பாகவே நிதியமைச்சர் பொன்னையன் தலைமையிலான குழு ஒன்று டெல்லி சென்று விட்டது குறிப்பிடத்தக்கது.
நேற்று நிகழ்ச்சியொன்றில் பேசிய பொன்மையன், தமிழகத்தை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாகக் குற்றம்சாட்டியிருந்தார். வளர்ந்துவிட்ட மாநிலம் என்று கூறி தமிழகத்துக்கு போதுமான நிதியை ஒதுக்க மத்திய அரசு மறுப்பதாகவும் கூறியுள்ளார்.
பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் வளர்ச்சியடையவில்லை என்று கூறி அம் மாநிலங்களுக்குஅதிக நிதி தரப்படுகிறது.
ஆனால், தமிழகம் வளர்ந்துவிட்டது தவறு என்பது மாதிரி மத்திய அரசின் செயல்பாடு உள்ளது.
இம் முறை தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கக் கோரி பிரதமர் மூலமாக திட்டக் கமிஷனையும் நிதியமைச்சரையும் ஜெயலலிதாவலியுறுத்துவார் என்று தெரிகிறது.
இது தவிர கலாமை குடியரசுத் தலைவராக்க அதிமுகவின் ஆதரவையும் அவர் நேரில் வாஜ்பாயிடம் தெரிவிப்பார். காவிரியில்தமிழகத்துக்கு நீர் தர கர்நாடகம் மறுப்பது குறித்தும் அவர் பிரதமரிடம் முறையிடுவார்.
பா.ஜ.க- அதிமுக உறவுக்கும் ஜெயலலிதா அடிபோடுவார் என்ற பேச்சும் எழுந்துள்ளது.
முதல்வருடன் புதிய தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர், நிதித்துறை செயலாளர் நாராயணன் ஆகியோரும் டெல்லி சென்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications