கலாமை எதிர்த்து வேட்பாளர்: கம்யூனிஸ்ட்கள் முடிவு
டெல்லி:
ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிட கே.ஆர். நாராயணன் மறுத்துவிட்டார். நேற்றிரவு தன்னைச் சந்தித்தகாங்கிரஸ் தலைவர்களிடம் அவர் இதைத் தெரிவித்தார்.
இதையடுத்து இன்று காங்கிரஸ் கட்சியின் செயற் குழுக் கூட்டம் அவசரமாகக் கூடி விவாதித்தது. இதில் கலாமுக்குஆதரவு தருவது குறித்து உடனடியாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
நாளை அல்லது மறுநாள் காங்கிரஸ் காரியக் கமிட்டின் அனைத்து உறுப்பினர்களுடனும் கூடு மீண்டும்விவாதித்துத்துவிட்டு இந்த விவகாரத்தில் முடிவெடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி தங்களிடம் ஆலோசனை நடத்தாமல் அப்துல் கலாமின் பெயரை அறிவித்தால்அவரை ஆதரிக்க மாட்டோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும்திட்டவட்டமாக அறிவித்துவிட்டன.
இக் கட்சிகளின் சார்பில் ஒருவரை போட்டியிட வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரசுடன் பேசி ஒருபொது வேட்பாளரை நிறுத்த இக் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
காங்கிரசைப் பொறுத்தவரை அலெக்சாண்டரை எதிர்த்தது. கே.ஆர். நாராயணனையே மீண்டும் ஜனாதிபதியாக்கவேண்டும் என்றது. இந்த யோசனைக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. அலெக்சாண்டரைநாயுடுவும் எதிர்த்தார்.
அலெக்சாண்டர் பெயரை தொடர்ந்து வலியுறுத்தினால், நாயுடு காங்கிரசுடன் சேர்ந்து அதை எதிர்ப்பார் என்றுபா.ஜ.க. நினைத்தது. நாயுடுவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் சேர்ந்தால் தாங்கள் நிறுத்தும் வேட்பாளர்நிச்சயம் தோல்வியடைவார் என்பதால், கிருஷ்ணகாந்த் பெயரை பா.ஜ.க. சொன்னது. இதை நாயுடு ஆதரித்தார்.
அவருக்கு காங்கிரசும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொடர்ந்து நாராயணனையே மீண்டும் ஜனாதிபதியாக்கவற்புறுத்தின.
இதனால் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதில் போட்டி ஏற்பட்டது. இதைத் தவிர்ப்பதற்காக கலாமின் பெயரைநாயுடு முன்மொழிந்தார். இதை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கள் ஏற்பார்கள் என்று அவர் நினைத்தார்.நாயுடுவின் யோசனையை ஏற்ற பா.ஜ.க. கலாமின் பெயரை அறிவித்தது.
ஆனால், அதற்கு முன் இது குறித்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளுடன் பா.ஜ.க. ஆலோசனைநடத்தவில்லை.
அப்துல்கலாம் நிறுத்தப்படுவதாக அவர்களுக்கு தகவல் மட்டுமே சொல்லப்பட்டது. இது அக் கட்சிகளைகடுப்பாக்கிவிட்டது. அனைவரும் சேர்ந்து ஒருமித்த கருத்தோடு ஜனாதிபதியைத் தேர்வு செய்வோம் என்றுகூறிவிட்டு இப்படி உங்கள் இஷ்டத்துக்கு வேட்பாளரை முடிவு செய்துள்ளதை ஏற்க முடியாது என கம்யூனிஸ்ட்கட்சிகள் கூறிவிட்டன.
இதே கருத்தைத் தான் காங்கிரசும் பிரதிபலிக்கிறது.
ஒருவேளை கலாமை காங்கிரஸ் ஆதரிக்க முன் வந்தாலும் கூட கம்யூனிஸ்ட் கட்சிகள் அவரை ஆதரிக்கமாட்டார்கள் என்று தெரிகிறது. தங்கள் சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்தி தங்களை புறக்கணித்த மத்திய அரசுக்குஎதிர்ப்பு தெரிவிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
காங்கிரஸ்- இடதுசாரிகள் எதிர்த்தாலும் கலாம் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுவிடுவார். அதற்குத்தேவையான ஓட்டுகள் தேசிய ஜனநாயக முன்னணிக்கு கிடைத்துவிட்டது.
நாயுடு, முலாயம் சிங் யாதவ், ஜெயலலிதா ஆகியோரின் ஆதரவு கிடைத்துள்ளதால் கலாமை நிறுத்தி தேசியஜனநாயக முன்னணியால் வென்றுவிட முடியும்.
ஆனால், எல்லோரும் சேர்ந்து தன்னை தேர்ந்தெடுத்தால் மகிழ்வேன் என்று அப்துல் கலாம் தெரிவித்துள்ளதாகக்கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications