தீவிரவாதிகளுக்குள் கோஷ்டி சண்டை: 7 பேர் சாவு
ஜம்மூ:
லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளுக்குள் நடந்த பயங்கரமாக கோஷ்டிச் சண்டையில்7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பல் காயமடைந்தனர்.
லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளுக்கு இடையே சமீபகாலமாக மோதல்வெடித்துள்ளது. லஷ்கர் அமைப்பில் உள்ளவர்கள் பாகிஸ்தானியர்கள். ஹிஸ்புல் அமைபில் பெரும்பான்மையினர்காஷ்மீரிகள்.
சர்வதேச நெருக்குதல் காரணமாக தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் பல கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்துள்ளது.இதனால், தீவிரவாதிகளுக்கு பணம் வருவதிலும் ஆயுதங்கள் வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தீவிரவாதிகளின்தகவல் தொடர்பு அமைப்புகளும் அமெரிக்க நெருக்குதலால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
இதனால் தீவிரவாதிகள் பெரும் நெருக்கடியில் உள்ளனர். அவர்களுக்குள் பகுதியைப் பிரித்துக் கொள்வதிலும்பணத்தை பங்கிடுவதிலும் பிரச்சனை வெடித்து வருகிறது.
இந் நிலையில் பாகிஸ்தானின் லஷ்கர்-ஏ-தெய்பா தீவிரவாதிகளுக்கும் காஷ்மீரிகளைக் கொண்ட ஹிஸ்புல்முஜாகிதீன் தீவிரவாதிகளுக்கும் இடையே காஷ்மீரின் தோடா மாவட்டத்தை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுஎன்பதில் பிரச்சனை எழுந்தது.
இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே நேற்றிரவில் வாக்குவாதம் எழுந்தது. பின்னர் இருவரும் பிரிந்துசென்றுவிட்டனர். தொடர்ந்து இன்று அதிகாலை இது மோதலாக வெடித்தது. கிஸ்த்வார் என்ற இடத்தில் இருதரப்பினரும் துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டனர்.
இந்த பயங்கரமான துப்பாக்கிச் சண்டையில் 7 தீவிரவாதிகள் இறந்தனர். இதில் ஒரு தீவிரவாதி பாகிஸ்தானின்லஷ்கர் அமைப்பைச் சேர்ந்தவன். மற்ற 6 பேரும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள். இந்த 6 பேரும்ஷகீல் அன்சாரி என்பவனின் கோஷ்டியைச் சேர்ந்த முஜாகிதீன் தீவிரவாதிகள்.
மேலும் 3 தீவிரவாதிகள் படுகாயமடைந்தனர்.
இந்த துப்பாக்கிச் சண்டையில் இரு தரப்பினரும் கிரனைட்களையும் வீசிக் கொண்டனர். இதனால் அந்தப் பகுதியேபோர்க் களமாக காட்சியளித்தது.
இந்த துப்பாக்கிச் சத்தம் கேட்டு ராணுவத்தினரும் போலீசாரும் அங்கு விரைந்தனர். இதையடுத்து தீவிரவாதிகள்தப்பியோடிவிட்டனர்.
தீவிரவாதிகளுக்குள் மோதல் வெடித்துள்ளதால் ராணுவம் மகிழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு பழிவாங்க ஹிஸ்புல்தீவிரவாதிகள் இனி லஷ்கர் கும்பலை விரட்டும். அவர்களுக்கு ஆதரவாக இன்னொரு பாகிஸ்தான் கும்பலானஜெய்ஷ்-ஏ-முகம்மத் கிளம்பும்.
இதனால் இந்த மோதல் இனி தொடர் கதையாகும் என்று தெரிகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications