கடத்தல் கும்பலுடன் கூட்டுக் கொள்ளை அடித்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

ஈரோட்டில் போலி பெட்ரோல் தயாரிப்பதற்காக கடத்தி வரப்பட்டு கைப்பற்றப்பட்டு போலீஸ் பாதுகாப்பில்வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நாப்தா மற்றும் மீதைல் ஆல்கஹால் போன்ற பொருள் அடங்கியபேரல்கள் காணாமல் போயுள்ளன.

காக்கிச் சட்டைகளே அதை விற்று சாப்பிட்டு விட்டனரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பணத்தை வாங்கிக் கொண்டு கடத்தல்காரக்களுக்கே அதை போலீசாரே திருப்பித் தந்திருக்கலாம் என்றும்கூறப்படுகிறது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலி பெட்ரோல் தயாரிப்பற்காக மீதைல் ஆல்கஹாலையும் நாப்தாவையும் ஒரு கும்பல் கடத்தி வந்து ஈரோட்டில்ஓரிடத்தில் பதுக்கி வைத்திருந்தது. இது குறித்து மாவட்ட எஸ்.பி. சைலேந்திர குமாருக்கு போலீஸ் இன்பார்மர்மூலம் தகவல் கிடைக்க உடனே அந்த இடத்தில் அதிரடி நடத்தி அதை கைப்பற்ற வைத்தார்.

கைப்பற்றப்பட்ட பேரல்கள் ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தன. இந்தஸ்டேசன் தான் வழக்கையும் விசாரித்து வந்தது.

போலி பெட்ரோல் கும்பல்கள் குறித்த பைல்களை எஸ்.பி. பார்வையிட்டபோது அவருக்கு அதிர்ச்சித் தகவல்கிடைத்தது. இதற்கு முன்பும் ஓரிடத்தில் சுமார் 220 பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாப்தா, மீதைல்ஆல்கஹால் போன்றவற்றை தாலுகா காவல் நிலைய போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இவற்றைப் பாதுகாக்க இந்த ஸ்டேசனைச் சேர்ந்த போலீசார் தினம் ஒருவராக அனுப்பப்பட்டனர். ஆனால், இதில்80 பேரல்கள் காணாமல் போய்விட்டன என்ற தகவல் அந்த பைல்களில் இருந்தது.

ஆனால், அது தொடர்பாக தாலுகா ஸ்டேசன் போலீசார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை.

இதையடுத்து உஷாரானார் எஸ்.பி. இப்போதும் அதே மாதிரி பேரல்கள் காணாமல் போவதைத் தடுக்க இந்த புதியபேரல் பறிமுதல் வழக்கை உடனடியாக குற்றப் பிரிவு போலீசாருக்கு மாற்ற உத்தரவிட்டார். இப்போது பிடிபட்டபேரல்களை குற்றப் பிரிவுப் போலீசாரின் பாதுகாப்பில் கொண்டு வந்தார்.

அடுத்த கட்டமாக தாலுகா காவல் நிலைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளார் சைலேந்திர குமார்.220 பேரல்களில் 80 பேரல்கள் எப்படி காணாமல் போயின? அதைப் பாதுகாக்க தினம் ஒரு போலீஸ்காரர் சென்றும்அது எப்படி காணாமல் போனது? போலீசார் சரியான பணியாற்றுகிறார்களா என்பதை ஏன் எஸ்.ஐயும்,இன்ஸ்பெக்டரும் கண்காணிக்கவில்லை என்ற விசாரணையை ஆரம்பித்திருக்கிறார்.

குற்றப் பிரிவு போலீசாரைக் கொண்டே இந்த விசாரணையை நடத்தி வருகிறார்.

காவலுக்கு சென்ற போலீசாரே அந்த பேரல்களை மீண்டும் போலி பெட்ரோல் கும்பல்களுக்கு விற்றிருக்கலாம்என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதனால் இந்தக் கடத்தல் மற்றும் போலி பெட்ரோல் கும்பலுக்கும் போலீசாருக்கும்இடையே தொடர்பிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பாக விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் குற்றப் பிரிவு போலீசாரிடம் நல்லசாமிஎன்பவர் சிக்கினார். அவர் தான் இந்த பேரல்களை கடத்தி வர உதவியவர் என்று தெரிகிறது.

விரைவில் இந்த பேரல்கள் காணாமல் போன விவகாரத்தில் பல போலீசாரும் சிக்குவர் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+