வானம் கருக்க மழைச் சோறு: கிராமத்தின் நம்பிக்கை
மூலனூர்:
மழைக்காக யாகம் நடத்துவது, வயலின் வாசிப்பது, கழுதைக்கு திருமணம் செய்வது என்றுகேள்விப்பட்டிருக்கிறோம். ஈரோடு மாவட்டம் மூலனூர் என்ற இடத்தில் மழை வேண்டி மழைச்சோறு வாங்கிச்சாப்பிடும் நூதன நிகழ்ச்சி நடந்தது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நிலவிய கோடையில் பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளது. திடீர் திடீரெனஆங்காங்கே மழை பெய்கிறது. அதுவும் சில இடங்களில் மட்டும் தான்.
மற்றபடி மாநிலத்தின் வறட்சியை போக்கும் அளவுக்கு மழை இல்லை.
மழையில்லாமல் சேலம், கரூர், ஈரோடு மாவட்டங்கள் வெந்து நொந்து போய்உள்ளன.
இந் நிலையில் ஈரோடு அருகே தூரம்பாடி என்ற கிராமத்தில் ஒரு நூதனமான நிகழ்ச்சி நடந்தது. மழையில்லாததாலநிலம் பாளம் பாளமாக வெடித்துப் போய் காட்சியளிக்கும் இந்த ஊரில் மழைக்காக வருண பகவானை வேண்டிமழைச்சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடந்தது.
இதற்காக கிட்டத்தட்ட இந்த கிராமத்தின் அனைத்து வீடுகளில் இருந்தும் சோறு வாங்கப்பட்டது. இந்தஒட்டுமொத்த உணவும் ஊர் சாவடிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி அந்தஉணவை பகிர்ந்து உண்டனர்.
இதையடுத்து துடைப்பம், கூடை, அகப்பம் போன்றவற்றை வைத்து பெண்கள் கும்மியடித்தனர். ஒப்பாரிப்பாடல்களைப் பாடினர்.
பின்னர் அனைவரும் ஊருக்கு வெளியே போய் சாப்பிட்ட கைகளை கழுவினர். இப்படிச் செய்தால் மழை வரும்என்பது இந்த ஊரின் நம்பிக்கை.
வந்தது மழை:
இந்த நிகழ்ச்சி முடிந்த சில மணி நேரங்கள் கழித்து லகான் படத்தில் வருவது மாதிரி மேகங்கள் திரண்டன. வானம்இருண்டது. சரி மழை வரப் போகிறது என்று மக்கள் ஆனந்தத்தில் மகிழ, வெறும் லேசான தூரலை மட்டும்போட்டுவிட்டு, அந்த படத்தில் வருவது மாதிரியே மேகம் கலைந்தது.
இதையடுத்து சோகத்தில் மூழ்கியுள்ளனர் இந்த மக்கள். நிகழ்ச்சி நடந்த சில நாட்கள் கழித்துத் தான் மழை வரும்என்று சிலர் நம்பிக்கை தந்திருப்பதால் வானம் பார்த்தபடி காத்திருக்கின்றனர் இந்த வெள்ளந்தியானகிராமவாசிகள்.
கருகும் பூமி நனைய வானம் கருக்குமா?
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications