திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் மரகத லிங்கத்தை கொள்ளையடிக்க முயற்சி
திருநள்ளாறு:
திருநள்ளாற்றில் உள்ள புகழ்பெற்ற சனீஸ்வர பகவான் கோவிலில் பெரும் கொள்ளை முயற்சி ஒன்றுதவிர்க்கப்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்கமும் தப்பியது.
இந்த சனீஸ்வரன் கோவிலில் கடந்த திங்கள்கிழமை இரவு சனி பகவான் தங்கக் காகம் வாகனத்தில் உலா வந்தார்.இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் வழக்கம் போல் கோவிலின் கதவுகள் பூட்டப்பட்டன.
ஆனாலும் கோவிலுக்குள் கூர்க்காக்களும் வேறு பல ஊழியர்களும் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சுமார் 2.30 மணியளவில் கோவிலின் உட்புறத்தில் ஏதோசத்தம் கேட்டது. இதையடுத்து காவலாளிகள் உடனே உட்புறக் கதவைத் திறந்து கொண்டு அங்கு சென்றுபார்த்தனர்.
உள்ளே இருந்த மற்றொரு குட்டிக் கோவிலான தர்பாரண்யேஸ்வரர் கோவில் பகுதியில் இருந்து தான் சத்தம்வருகிறது என்பதைக் கோவிலின் மெய்க் காவலரான கிருஷ்ணராஜ் கண்டுபிடித்தார். உடனே அப்பகுதிக்குச் சென்றுபார்த்த போது அந்தக் கோவிலின் முக்கியமான மரக்கதவு திறந்து கிடப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
உடனே ஜீவன் சர்மா என்ற கூர்க்கா மற்றும் கோவிந்து என்ற கோவில் ஊழியர் ஆகியோரையும் அழைத்துக்கொண்டு தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்குள் கிருஷ்ணராஜ் நுழைந்தார்.
திறக்கப்பட்டிருந்த மரக் கதவின் பூட்டில் சாவியும் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் மேலும்அதிர்ச்சியடைந்தனர். வழக்கமாக இந்த மரக்கதவை உள்புறமாகத் தாழ் போட்டு விட்டு, பக்கத்தில் உள்ள சிறியகதவு வழியாக வெளியேறி அதையும் பூட்டுவது தான் வழக்கம்.
ஆனால் தற்போது மரக்கதவின் வெளிப்புறப் பூட்டு திறக்கப்பட்டிருப்பதைக் கண்டு தான் இவர்கள் பெரிதும்அதிர்ச்சி அடைந்து விட்டனர்.
உடனே கோவிலின் உட்பிரகாரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இமம்லால் என்பவரைத் தேடிப் பிடித்துஇதுகுறித்து விசாரித்தனர். ஆனால் அவரோ தான் கோவிலின் மறு பகுதியில் ரவுண்ட்ஸ் சென்றிருந்ததாகக்கூறினார்.
இதற்கிடையே அவர்கள் மீண்டும் அங்கு வந்து பார்த்த போது அந்தக் கதவின் பூட்டு மீண்டும் பூட்டப்பட்டநிலையில் இருந்ததைக் கண்டதும் அவர்கள் அதிர்ச்சியின் உச்சத்துக்கே போய் விட்டனர்.
இதையடுத்து திருநள்ளாறு போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. போலீசாரும் உடனடியாகக் கோவிலுக்குவிரைந்து வந்து விடிய விடிய விசாரணை நடத்தினர்.
இந்த சனீஸ்வரன் கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத லிங்கம் ஒன்று உள்ளது. இந்த லிங்கம்பாதுகாப்பான ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த லிங்கத்தைக் கொள்ளையடிக்க முயன்ற கோவில் ஊழியர் ஒருவர், தங்கக்காக வாகனத்தின் நாகம் மற்றும் குண்டலத்தை மட்டும் கொள்ளையடித்த நிலையில் மாட்டிக் கொண்டார்.
மரக்கதவின் பூட்டைத் திறக்கப் பயன்படுத்தும் சாவியால் மரகத லிங்கம் வைக்கப்பட்டுள்ள அறையையும் திறக்கமுடியும் என்ற உண்மையும் போலீசார் விசாரணையின் போது தெரிய வந்த போது தான் கோவில் நிர்வாகமேமேலும் அதிர்ச்சியில் உறைந்தது.
இந்தக் கோவிலின் பாதுகாப்புக்காக தினமும் 51 பூட்டுக்கள் பூட்டப்பட்டு அனைத்துப் பூட்டுக்களின் சாவிகளும்கோவிலின் தனி அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுமாம். மற்றொரு சாவி செட் கோவில் கட்டளை தம்பிரானிடம்கொடுக்கப்படும்.
கட்டளை தம்பிரான் வசிக்கும் மடத்தில் உள்ள ஒரு பாதுகாப்புப் பெட்டியில் இந்த சாவிகள் அனைத்தும் வைத்தும்பூட்டப்படும். அந்தப் பெட்டியின் இரு சாவிகளில் ஒன்று கட்டளை தம்பிரானிடமும் மற்றொன்று பேஷ்காரிடமும்இருக்கும்.
இந்நிலையில் தான் தர்பாரண்யேஸ்வரர் கோவிலை யாரோ சிலர் திறந்து விட்டு அதே சாவியைக் கொண்டு மரகதலிங்கம் வைக்கப்பட்டுள்ள அறையையும் திறக்கச் சென்ற போது ஏதோ சத்தம் ஏற்பட்டதன் காரணமாக கொள்ளைமுயற்சியைக் கைவிட்டு அப்படியே ஓடியுள்ளனர்.
தர்பாரண்யேஸ்வரர் கோவிலின் மரக்கதவைத் திறக்கப் பயன்படும் சாவி எப்படி வெளியேறியது, யார் அதைஎடுத்துச் சென்று இந்தக் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications