காங்.- த.மா.கா. இணைப்பு: கைமாறுகிறது சத்யமூர்த்தி பவன்
சென்னை:
காங்கிரஸ் கட்சியுடன் அடுத்த மாதம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைகிறது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியிடமிருந்து மூப்பனாரால்பறிக்கப்பட்ட கட்சியின் தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவன் மீண்டும் காங்கிரஸ் வசம் செல்கிறது.
இணைந்த கட்சிகளின் தலைமையிடமாக இந்த கட்டடம் மாறவுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்த 4 மாடிக் கட்டிடமும அதைச் சுற்றியுள்ள மைதானமும் பல நூறு கோடி மதிப்புள்ளது.
காங்கிரஸ் தலைமையுடன் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார் மூப்பனார்.அப்போது காங்கிரஸ் வசமிருந்து இந்த அலுவலகத்தை மூப்பனார் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
அப்போது காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருந்த குமரி அனந்தன், த.மா.கவுக்கு வரவில்லை. இதனால் இந்தக் கட்டடத்தில் இருந்து குமரிஅனந்தன் இரவோடு இரவாக விரட்டப்பட்டார். கட்டடத்தைவிட்டுப் போகும்போது ஏ.சி. மெசின், பேக்ஸ் மெசின்களை குமரி அனந்தனின்ஆட்கள் எடுத்துக் கொண்டு போய்விட்டதாக அப்போது த.மா.கா. குற்றம் சாட்டியது.
இதையடுத்து குமரி அனந்தன் அங்கிருந்து வெளியேறி தேனாம்பேட்டையில் வாடகைக்கு ஒரு இடத்தைப் பிடித்து அங்கு காங்கிரஸ்அலுவலகத்தை அமைத்தார். அதே போல காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமான அண்ணா சாலையில் பல ஏக்கர் நிலம், கல்யாணமண்டபம், கடைகள் உள்ளன. இவற்றையும் மூப்பனார் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
இந் நிலையில் மூப்பனார் மறைந்த பின் காங்கிரஸ் கட்சியுடன் மீண்டும் சேருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கின. கட்சிகள்இணைவதைவிட இந்த சொத்துக்களை யார் நிர்வகிப்பது என்பதில் அதிக பிரச்சனைகள் எழுந்தன.
இதை காங்கிரஸ் வசம் தர வாசன் தயாராக இல்லை. அறக்கட்டளையில் தனது தந்தையின் ஆதரவாளர்கள் தான் தொடர்ந்து இருக்கவேண்டும் என நிபந்தனை விதித்தார். இதனால் கட்சிகள் இணைவதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து சோனியாவே வாசனை அழைத்துப்பேசினார்.
இனி உங்கள் சொத்து எங்கள் சொத்து என்று பார்க்கக் கூடாது, இனி இவை நமது கட்சியின் சொத்துக்கள். இதனால், இதை காங்கிரஸ் வசம்விட்டுத்தர வேண்டும். அதை காங்கிரஸ் அறக்கட்டளை நிர்வகிக்கும் என்றார். சோனியாவின் நிர்பந்தத்தை மீற முடியாத வாசன் ஏற்றுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து சத்யமூர்த்தி பவன் உள்ளிட்ட பல சொத்துக்களை நிர்வகித்து வரும் அறக்கட்டளை உறுப்பினர்களாக காங்கிரஸ் ஆதரவுதலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந் நிலையில் அடுத்த மாதத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தமாகா இணையவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இதையடுத்து இணைப்புக்குப்பின் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமாக மீண்டும் சத்யமூர்த்தி பவன் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சத்யமூர்த்தி பவனுக்கு வெள்ளை அடிக்கும் வேலைகள் நடந்து முடிந்துள்ளன.
குமரி அனந்தன் தலைமையில் காங்கிரஸ் வசம் சத்யமூர்த்தி பவன் இருந்தபோது போன் பில், வரிகள், மின் கட்டணம் கூட ஒழுங்காகக்கட்டப்படவில்லை. அந்த பாக்கியை தனது சொந்த செலவில் கட்டி கட்டடத்தையும் தனது சொந்த செலவிலேயே பராமரித்து வந்தார்மூப்பனார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications