காஷ்மீரில் நுழையும் பின் லேடனின் தீவிரவாத கும்பல்
டெல்லி:
காஷ்மீர் பகுதியில் பின் லேடனின் அல்-கொய்தா தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அமெரிக்காகூறியுள்ளது. இது எங்களுக்கும் தெரியும் என இந்தியா கூறியுள்ளது.
நேற்று இந்தியா வந்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் இதை பிரதமர் வாஜ்பாய்,பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசிடம் தெரிவித்தார்.
அல்-கொய்தா தீவிரவாதிகள் எல்லைப் பகுதியில் நடமாடி வருவது எங்களுக்கும் தெரியும் என ஜார்ஜ்பெர்னாண்டஸ் தெரிவித்தார். இந்தத் தீவிரவாதிகள் குறித்து ராணுவ உளவுப் பிரிவினர் அரசை தொடர்ந்துஎச்சரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க- பிரிட்டன் கூட்டுப் படைகளின் தாக்குதலில் இருந்து தப்பிய ஆயிரக்கணக்கானஅல்-கொய்தா தீவிரவாதிகள் பாகிஸ்தான் வட மேற்கு எல்லைப் புற மாகாணத்தில் ஊடுருவியுள்ளனர்.பழங்குடியினர் நிறைந்த இந்த மாகாணத்தில் அந்த மக்களைப் போலவே உடைகளை உடுத்திக் கொண்டு இந்தத்தீவிரவாதிகள் கலந்து உள்ளனர்.
மேலும் இந்தப் பழங்குடியினர் மத்தியிலும் தலிபான், அல்-கொய்தா தீவிரவாதிகளுக்கு பெரும் ஆதரவு உள்ளது.
இதனால் இந்தப் பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் தேடுதல் வேட்டையில இறங்கியுள்ளதுஅமெரிக்கா.
இதையடுத்து இந்த மாகாணத்தில் இருந்து அல்-கொய்தா தீவிரவாதிகள் தப்ப ஆரம்பித்துள்ளனர். அவர்கள்பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்துள்ளனர். இவர்கள் எல்லை தாண்டிஇந்தியாவுக்குள் நுழைய காத்துக் கொண்டுள்ளனர்.
இந்தத் தகவல்களை அமெரிக்கா அமைச்சர் இந்தியாவிடம் தெரிவித்தார்.
இந்தத் தீவிரவாதிகளை அமெரிக்காவிடம் இருந்து காப்பாற்றி இந்திய எல்லைப் பகுதிக்கு அழைத்து வந்ததேபாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவுப் பிரிவு தான் என்று இந்தியா கருதுவதாக டோன்ல்டிடம் பெர்னாண்டஸ்தெரிவித்தார்.
இந் நிலையில் நேற்று காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர். அவர்களின் தாடி, தலைப்பாகை, ஷூ போன்றவை அவர்கள் தலிபான் அல்லது அல்-கொய்தாஅமைப்பைச் சேர்ந்தவர்களைப் போல இருப்பதாக இந்திய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் எல்லைப் பகுதியை இந்தியா- பாகிஸ்தானுடன் இணைந்து அமெரிக்க- பிரிட்டன் கூட்டுப் படைகளும்கண்காணிக்க அனுமதிக்க வேண்டும் என ரம்ஸ்பீல்ட் இந்திய பாதுகாப்பு அமைச்சர் பெர்னாண்டசிடம்தெரிவித்தார்.
ஆனால், இந்த யோசனையை ஏற்க முடியாது என்று இந்தியா கூறிவிட்டது.
தீவிரவாதிகள் நுழைவதைத் தடுக்க வேண்டிய நாடு பாகிஸ்தான். எனவே, பாகிஸ்தான் பகுதியில் தான்அமெரிக்காவும் பிரிட்டனும் கண்காணிக்க வேண்டும். இந்தியாவுக்குள் வந்து கண்காணிக்க வேண்டிய அவசியம்இல்லை என இந்திய உள்துறை அமைச்சர் அத்வானி தெள்ளத் தெளிவாகக் கூறிவிட்டார்.
அதே நேரத்தில் பாகிஸ்தானுடன் இணைந்து எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவுவதைக் கண்காணிக்கஇந்தியா தயாராக உள்ளதாகவும் அமெரிக்காவிடம் தெளிவாக்கப்பட்டுள்ளது.
அதே போல பதற்றத்தைத் தணிக்க இந்தியா எடுத்து வரும் முயற்சிகளை அமெரிக்கா பாராட்டியுள்ளது. ஆனால்,இன்னும் பல நடவடிக்கைகளை இந்தியா எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ்முஷாரப் கூறியுள்ளார்.
கடற்படையை வாபஸ் வாங்கியதை வரவேற்றாலும் கூட முக்கியமான தாக்குதல் படையான ராணுவத்தையும் போர்விமானங்களையும இந்தியா தொடர்ந்து எல்லையில் குவித்து வைத்துள்ளது. இவற்றை வாபஸ் பெற்றால் தான்எல்லையில் அமைதி திரும்பும் என முஷாரப் கூறியுள்ளார்.
ஆனால், இப்போதைக்கு படை வாபஸ் கிடையாது. போர் விமானங்களும் எல்லையில் தயார் நிலையில் தான்இருக்கும். தீவிரவாதிகள் விவகாரத்தில் பாகிஸ்தான் எப்படி நடந்து கொள்கிறது என்பதை வைத்துத் தான்இந்தியாவின் அடுத்த நடவடிக்கை இருக்கும் என பெர்னாண்டசும் அத்வானியும் கூறியுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications