பிரதமருடன் ஜெ. சந்திப்பு: காவிரி- இலங்கை- நிதி நெருக்கடி குறித்து பேச்சு
டெல்லி:
தமிழகத்துக்கு இந்த ஆண்டுக்கான (2002-2003) திட்ட ஒதுக்கீடாக ரூ. 5,750 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் திட்டக் கமிஷன் தலைவர் கே.சி. பந்துடன் முதல்வர் ஜெயலலிதா பேச்சு நடத்திய பின்னர் இந்த நிதிஒதுக்கப்பட்டது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால் ரூ. 550 கோடி அதிகம் தான்.
ஆனால், கடும் நிதிச் சுமையில் சிக்கித் தவித்து வரும் தமிழக்ததுக்கு உடனடியாக கூடுதலாக ரூ. 3,000 கோடிதேவைப்படுகிறது. இந்த நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. வளர்ச்சி அடைந்துவிட்ட மாநிலம் என்பதால்தமிழகத்துக்கு அதிக நிதியை ஒதுக்க மத்திய திட்டக் கமிஷன் மறுத்து வருகிறது.
அதே நேரத்தில் 10வது ஐந்தாண்டுத் திட்டத்துக்கு தமிழகத்துக்கு ரூ. 40,000 கோடி ஒதுக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இது 9வது ஐந்தாண்டுத்துத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டதைவிட ரூ. 15,000 கோடி அதிகமாகும்.
காவிரி நீர்:
முன்னதாக பிரதமர் வாஜ்பாயை சந்தித்த ஜெயலலிதா காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை வழங்குமாறுகர்நாடகத்துககு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அகதிகளுக்கு இலவச கப்பல்:
இலங்கை அமைதிப் பேச்சு குறித்தும் இருவரும் விவாதித்தனர். தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தங்கள்தாய் நாடு திரும்ப மத்திய அரசு கப்பல்களை இயக்க வேண்டும். அவர்களை இலவசமாய் அழைத்துச் சென்றுஇலங்கையில் சேர்க்க வேண்டும் எனவும் ஜெயலலிதா பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.
4 இயக்கங்களுக்குத் தடை:
பின்னர் உள்துறை அமைச்சர் அத்வானியைச் சந்தித்துப் பேசிய ஜெயலலிதா தமிழகத்தில் செயல்பட்டு வரும் 2மதவாத, 2 இனவாத இயக்கங்களுக்கு தடை விதிக்குமாறு வற்புறுத்தினார்.
அல்-உம்மா, ஜிகாத் கமிட்டி, தமிழ்நாடு விடுதலைப் படை, தமிழ்நாடு மீட்சிப் படை ஆகிய அமைப்புகளுக்கு தடைவிதித்து இந்த இயக்கத்தினர் மீது பொடோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தமிழக போலீஸ்துறையை நவீனமாக்கவும், நவீன ஆயுதங்கள், கருவிகள் வாங்கவும் ரூ. 100 கோடி வழங்கவேண்டும் என அத்வானியிடம் ஜெயலலிதா வலியுறுத்தினார்.
இது தவிர திகார் சிறையை பாதுகாத்து வரும் தமிழக போலீசாருக்கு உரிய சிறப்பு ஊதியத்தை மத்திய அரசுவழங்காமல் இருப்பதையும் அத்வானியிடம் ஜெயலலிதா சுட்டிக் காட்டினார். உடனடியாக இந்த நிலுவைத்தொகையை போலீசாருக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்ற பின்னர் ஜெயலிதா டெல்லி செல்தும் பிரதமரைச்சந்திப்பதும் இதுவே முதல்முறையாகும்.
நேற்றிரவே ஜெயலலிதா சென்னை திரும்பிவிட்டார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications