கலாமுக்கு காங்கிரஸ் ஆதரவு
டெல்லி:
ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தப்படவுள்ள டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமுக்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவுதெரிவித்துள்ளது.
முதலில் மீண்டும் கே.ஆர். நாராயணனையே ஜனாதிபதியாக்க வேண்டு என்று காங்கிரஸ் கோரியது. ஆனால்,அதை பா.ஜ.க. ஏற்கவில்லை. நாராயணனும் போட்டியிட விரும்பவில்லை. பி.சி.அலெக்சாண்டரை நிறுத்தலாம் எனபா.ஜ.க. கூறியது. ஆனால், அதை காங்கிரஸ் ஏற்கவில்லை.
இதையடுத்து துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்தை ஜனாதிபதியாக்க முடிவானது. ஆனால், அதில் தேசியஜனநாயகக் கூட்டணியின் அனைத்துக் கட்சிகளுக்குள்ளும் ஒற்றுமை ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து பொது வேட்பாளராக அப்துல் கலாமின் பெயரை தே.ஜ. கூட்டணி அறிவித்தது. ஆனால், அதுதொடர்பாக கம்யூனிஸ்ட்கள் மற்றும் காங்கிரசுடன் மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவில்லை.
இதனால் தங்களை புறக்கணிக்கும் மத்திய அரசு நிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்க மாட்டோம் என கம்யூனிஸ்டுகள்கூறிவிட்டனர். காங்கிரசும் இந்த விஷயத்தில் மத்திய அரசை எதிர்த்தது. ஆனால், அப்துல் கலாமை எதிர்க்க அக்கட்சி விரும்பவில்லை.
இதையடுத்து கடந்த 3 நாட்களாக முழு அளவில் ஆலோசனை நடத்தி அப்துல் கலாமுக்கு ஆதரவைத்தெரிவித்துள்ளது.
ஜூலை 15ம் தேதி தேர்தல்:
கம்யூனிஸ்ட் கட்சிகள் வேட்பாளரை நிறுத்தினால் அப்துல் கலாம் போட்டியிட்டுத் தான் தேர்வு செய்யப்படுவார்.
அவ்வாறு ஒருவருக்கு மேற்பட்ட வேட்பாளர் இருந்தால் அடுத்த மாதம் 15ம் தேதி தேர்தல் நடக்கும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் அனைத்து மாநில எம்.பி, எம்.எல்.ஏக்களும் வாக்களிப்பர். தமிழகத்தைப் பொறுத்தவரை 234எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் வாக்களிப்பர். தமிழகத்தில் இந்த வாக்களிப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.
இந்தத் தேர்தலுக்கான தமிழக துணைத் தேர்தல் அதிகாரியாக ராஜாராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ. 15,000 டெபாசிட் கட்டி விண்ணப்பிக்கவேண்டும். அவர்களை 50 எம்.எல்.ஏக்கள் அல்லது 50 எம்.பிக்கள் முன்மொழிய வேண்டும்.
வேட்பு மனுக்களை குடியரசுத் தேர்தலுக்கான தலைமை அதிகாரி திரிபாதியிடம் டெல்லியில் சமர்பிக்க வேண்டும்.வேட்பு மனுக்களை இம் மாதம் 25ம் தேதி வரை சமர்பிக்கலாம். தேர்தல் நடந்தால் வாக்கு எண்ணிக்கை அடுத்தமாதம் 18ம் தேதி நடக்கும்.
தமிழக எம்.பி., எம்.எல்.ஏ. வாக்குகள்:
தமிழக எம்.எல்.ஏக்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் வைக்கப்படும் ஓட்டுப் பெட்டியில் வாக்களிக்கலாம்.எம்.பிக்களும் இங்கேயே வாக்களிக்கலாம். நியமன எம்.எல்.ஏக்களுக்கு ஓட்டுரிமை கிடையாது.
எம்.எல்.ஏக்கள் டெல்லியில் சென்று வாக்களிக்க நினைத்தால் அதற்கு என்னிடம் அனுமதி பெற்றுச் செல்லவேண்டும் என்றார்.
எதிர்ப்பு:
அப்துல் கலாம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்பது நிச்சயமாகிவிட்டது. அவரை எதிர்த்துகம்யூனிஸ்ட் கட்சிகள் வேட்பாளரை நிறுத்துவதில் திட்டவட்டமாக உள்ளன.
இந்த விஷயத்தில் கலாமை ஆதரித்த முலாயம் சிங் யாதவை மக்கள் முன்னணி கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட்கட்சிகள் நீக்கிவிட்டன. அதே போல அந்தக் கூட்டணியையும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கலைத்துவிட்டன.
புதிய சோபா செட்கள்:
மிகவும் எளிமைவாதியான கலாம் தங்கியிருக்கும் விருந்தினர் இல்லத்தில் நல்ல சோபாக்கள் கூட இல்லை.இப்போது அவரைச் சந்திக்க முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதால் புதிய சோபா செட்களுக்குபல்கலைக்கழக நிர்வாகம் ஏற்பாடு செய்து தந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications