ஜெ. கொண்டு வந்த சட்டத்தை மதிக்க மாட்டேன்: ஸ்டாலின்
சென்னை:
தமிழக அரசின் ஒருவருக்கு ஒருவர் சட்டத்தை மதிக்கப் போவதில்லை. எந்தப் பதவியையும் ராஜினாமா செய்ய மாட்டேன். முடிந்தால் அரசுஎனது பதவியைப் பறித்துக் கொள்ளட்டும் என்று சென்னை மாநகராட்சி மேயர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முன்னதாக திமுக தலைவர் கருணாநிதியும் இதையே தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசுகையில், மேயர் பதவிக்குரிய அதிகாரங்களைக் குறைத்து விட்டார்கள். இனிமேல் மேயராக யார்வந்தாலும் அவர் வெறும் பொம்மை மேயராகவே இருப்பார். அவரால் மக்களுக்கு எந்தப் பலனும் கிடையாது.
ஜெயலலிதா ஜனநாயகத்தை மதிப்பவராக இருந்தால், உண்மையான ஜனநாயகவாதியாக இருந்தால் இந்த சட்டத்தை கொண்டு வருவதற்குமுன் மாநகராட்சியின் ஒப்புதல் கேட்டிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.
தமிழகத்தில் இப்போது நடப்பது அதிமுக ஆட்சி அல்ல, துக்ளக் ஆட்சி. ஒருவருக்கு ஒரு பதவி என்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.ஆனால் தேர்தல் நடந்து முடிந்து நான் வென்ற பிறகு கொண்டு வந்ததைத்தான் எதிர்க்கிறோம். என்னை வெளியேற்றிய பிறகு துணைமேயருக்கோ அல்லது புதிய மேயருக்கோ அதிக அதிகாரங்களை வழங்க அதிமுக அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
நான் எம்.எல்.ஏ. பதவி அல்லது மேயர் பதவியை எதையுமே ராஜினாமா செய்யப் போவதில்லை. இந்த சட்டத்தை மதித்தால்தானேராஜினாமா செய்ய வேண்டும். அவர்களாகவே எந்தப் பதவியை வேண்டுமானாலும் பறித்துக் கொள்ளட்டும்.
என்னைப் பதவியிலிருந்து நீக்கிய பிறகு துணை மேயர் கராத்தே தியாகராஜனை பொறுப்பு மேயராக வைத்திருக்க அவர்கள்திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும் பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி 6 மாதத்திற்குள் மேயர் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால்இந்த ஆட்சியில்தான் எது வேண்டுமானாலும் நடக்கலாமே. பொருத்திருந்து பார்ப்போம் என்றார் ஸ்டாலின்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications