இந்தியர்களை கேவலப்படுத்தும் அமெரிக்க தூதரகம்: கண்டித்து நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை:
சென்னை அமெரிக்க தூதரகத்திற்கு விசா கோரி வருபவர்களை ரோட்டோரத்தில் பிளாட்பாரத்தில், பிச்சைக்காரர்களைப் போல நறுத்திவைப்பதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வானிஸ்ரீ என்ற பெண் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில், அண்ணா சாலையில் அமெரிக்க தூதரகம் உள்ளது. இங்குதான் தென் மாநிலங்களைச்சேர்ந்தவர்களுக்கு விசா கொடுக்கப்பட்டு வருகிறது. விசா கேட்டு வருபவர்கள் தூதரகத்திற்கு வெளியே தான் நிற்க வேண்டும்.
தலைக்கு மேல் ஒரு கூரை கூட கிடையாது.
மண்டையைப் பிளக்கும் சென்னை வெயிலுலிம், எப்போதாவது விழும் மழையிலும் வெளியில் ரோட்டில் தான் நிற்க வேண்டும். தினசரிநூற்றுக்கணக்கானவர்கள் இங்கு கையில் சான்றிதழ்கள், குழந்தைகளுடன் ஆண், பெண் பேதமில்லாமல் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைப்பார்க்கலாம்.
இங்கு இடம் பிடித்துத் தர வாடகை ஆட்களும் இருக்கிறார்கள். அவர்களிடம் பணம் கொடுத்துவிட்டால் இரவிலேயே இங்கு வந்துவரிசையில் உட்கார்ந்துவிடுவார்கள். காலையில் பணம் கொடுத்தவர்கள் வந்து இந்த இடத்தைப் பிடித்துக் கொள்ளலாம்.
பல நேரங்களில் ரெளடிக் கும்பல்கள் சும்மா வந்து இங்கு இடம் பிடித்துக் கொள்கிறது. வரிசையில் முதலில் போகனுமா? காசு கொடுங்கஎன்று இந்தக் கும்பல்கள் விசா வாங்க வந்தவர்களை நச்சரிக்கும்.
இப்படி தனது நாட்டுக்குச் செல்ல விசா வாங்க வருபவர்களை கேவலமாக நடத்தும் அமெரிக்கத் தூதரத்தை எதிர்த்தும், இந்த நிலைமைக்குமுடிவு கட்டக் கோரியும் வானிஸ்ரீ என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
தனது மனுவில் வானிஸ்ரீ கூறியிருப்பதாவது:
விசா கேட்டு வரும் இந்தியர்களை அமெரிக்கத் தூதரகம் பிளாட்பாரத்தில், பிச்சைக்காரர்களைப் போல நிறுத்தி வைத்துகேவலப்படுத்துகிறது. இதைக் காண சகிக்கவில்லை. விசா கேட்டு வருபவர்கள் நிற்க நிழற்குடை இல்லை, உட்கார வசதி இல்லை.கைக்குழந்தைகளுடன் பெண்களும், முதியவர்களும் படும் பயங்கர சிரமங்களை ஜீரணிக்க முடியவில்லை.
நாள் முழுவதும் இப்படி நிற்க வேண்டிய அவலம் உள்ளது.
விசா வாங்க வருபவர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று நான் அமெரிக்க தூதரகத்திடம் மனு கொடுத்தேன்.ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தூதரகத்திற்கு விசா கேட்டு வருபவர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரஉத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் வானிஸ்ரீ.
மனுவை ஏற்ற நீதிபதிகள் சுபாஷன் ரெட்டி மற்றும் முருகேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்திய வெளியுறவுத்துறை செயலாளருக்குநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இது தொடர்பாக 2 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என இந்திய வெளியிறவுத்துறைக்குஉத்தரவிடப்பட்டது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications