கலாமுக்கு என் ஆசிர்வாதங்கள்: சங்கராச்சாரியார்
காஞ்சிபுரம்:
எனது ஆத்ம நண்பரான அப்துல் கலாமுக்கு குடியரசுத் தலைவர் பதவி தேடி வந்திருப்பது பெருமை தருகிறது, மகிழ்ச்சி தருகிறது, அவர் ஒருசரியான தேர்வு என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.
காஞ்சி சங்கராச்சாரியாரும், அப்துல் கலாமும் மிக நெருங்கிய நண்பர்கள். அடிக்கடி காஞ்சி வரும் அப்துல் கலாம், ஜெயேந்திரரைசந்திப்பது உண்டு. இருவரும் ஆன்மிகம் மட்டுமின்றி தேச வளர்ச்சி, அறிவியல் தொடர்பாகவும் பேசிக் கொள்வது உண்டு.
அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து காஞ்சி சங்கராச்சாரியார் பெரும் மகிழ்ச்சிதெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
எனக்கும், கலாமுக்கும் இடையிலானது இதயபூர்வமான நட்பு. அவர் அடிக்கடி காஞ்சிக்கு வந்து என்னை சந்திப்பார். இருவரும் அறிவியல்வளர்ச்சிகள் தொடர்பாக பேசிக் கொள்வோம். காஞ்சிபுரம் நகர வளர்ச்சிக்காக அவர் நறைய யோசனைகள் கூறியுள்ளார். அவையெல்லாம்எங்களுக்கு நிரம்ப பலனுள்ளதாக இருந்தது.
அவர் ஒரு சாதாரண மனிதர். எத்தனையோ வசதிகள் வந்தாலும் அதை விரும்பாதவர். இன்றைக்கு ஒரு பள்ளி ஆசிரியர் கூட சகலவசதிகளுடன் இருக்கிறார். ஆனால் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியாக இருந்தும் கூட எளிமையாக இருப்பவர் கலாம்.
அவர் முஸ்லீமாக இருந்தும் பகவத் கீதையை படிக்கிறார், திருக்குறளைப் படிக்கிறார் என்று ஆச்சரியப்படுகிறார்கள். முதலில் அவர் ஒருவிஞ்ஞானி, பிறகு தேசியவாதி, கடைசியாகத்தான் அவர் ஒரு முஸ்லீம்.
மிகவும் புத்திசாலி கலாம், திறமைசாலி, அவரால் நாட்டை நல்ல பாதையில் கொண்டு செல்ல முடியும். அவருக்கு எனது ஆசிர்வாதங்கள்நண்பர் என்ற முறையில் எப்போதும் உண்டு என்று கூறியுள்ளார் ஜெயேந்திரர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications