ஏட்டுச் சுரைக்காய்!
சென்னை:
தமிழகத்தில் பள்ளி நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டதற்கு பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை ஒறு அறிவிப்பை வெளியிட்டடது. அதன்படி கிராமப்புறப் பள்ளிகள் காலை 9 மணிக்குத் துவங்கி மாலை 5 மணிக்கு முடிவடையும்என்றும் நகர்ப்புறப் பள்ளிகள் காலை 8.30 மணிக்குத் துவங்கி 4.30 மணிக்கு முடிவடையும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதன்மூலம் பள்ளிகளின் நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டது.
இது தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், பெற்றோர்களிடையே பெரும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.
8 மணி நேரம் ஒரு மாணவனோ அல்லது மாணவியோ பள்ளியில் படித்தால் அவர்களது மன நிலையும், உடல் நிலையும் பாதிக்கும் என்று பல்வேறுஅமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆசிரியர்களை அதிக நேரம் வேலை வாங்கும் திட்டத்துடன் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டது. ஆனால், இதனால் கல்வித் தரம் கூடப் போவதில்லைஎன்று பெற்றோர்கள் கூறுகின்றனர்.
தங்கள் குழந்தைகள் வெறும் படிப்பு தவிர வேறு விஷயங்களிலும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் பெற்றோர் இடையே அதிகரித்துவருகிறது. இதனால் விளையாட்டு, பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ், தியானம் கிளாஸ் என மாலை நேரங்களில் பலவிதமான நல்ல விஷயங்களில் குழந்தைகளைஈடுபடுத்தி வருகின்றனர்.
இதன் பிறகு டியூசன் ஆரம்பித்துவிடுகிறது. இந் நிலையில் பள்ளி நேரத்தை அதிகரித்தால் வெறும் ஏட்டுச் சுரைக்காய்களாக தங்கள குழந்தைகள் மாறவேண்டிய நிலை ஏற்படும் என பெற்றோர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அரசின் அறிவிப்பில் மாற்றம்:
பெற்றோர் இடையே இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், பள்ளி நேரங்களில் சமீபத்தில் அறிவித்த மாற்றத்தில்சிறு திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
இதன்படி கடைசி பீரியட் கட்டாயம் இல்லை. மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப அந்த பீரியடை நடத்தலாம் அல்லது ரத்து செய்யலாம்என்று தற்போது அரசு கூறியுள்ளது.
பள்ளிகளுக்கு அரசு அறிவித்துள்ள புதிய பீரியட் விவரம்:
காலையில் பள்ளி துவங்கும் முன் 15 நிமிடம் கடவுள் வழிபாட்டுக்கு ஒதுக்க வேண்டும். அதன் பின் வகுப்புகள் துவங்கும். காலையில்மொத்தம் நான்கு பீரியட்கள் (வகுப்புகள்) இருக்கும், ஒவ்வொரு பீரியடும் தலா 45 நிமிடங்கள் நடக்கும்.
இதில் இரண்டு பீரியட் முடிந்தவுடன் 10 நிமிட இடைவெளி விடப்பட வேண்டும். பிற்பகலில் 4 பீரியட்கள் இருக்கும். அது 40 நிமிடஅளவாக இருக்கும். இதிலும் 2 பீரியட்களுக்கு மத்தியில் 10 நிமிட இடைவெளி விடப்பட வேண்டும்.
இதில் கடைசி பீரியட் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப இருக்கும். அவர்கள் விரும்பினால் நடத்தலாம். இல்லாவிட்டால் ரத்துசெய்துவிடலாம். கடைசி வகுப்பு குறித்த அரசின் இந்த அறிவிப்பு மேலும் குழப்பங்களைத் தான் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications