புதுமைப்பித்தன் நூல்கள் நாட்டுடமையாக்கம்
சென்னை:
எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன் மற்றும் கு.ப.ரா. சேது அம்மாள் ஆகியோரின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.
இனி அவர்களது நூல்களையும், படைப்புகளையும் யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதற்கு ஈடாக இரு எழுத்தாளர்களின் குடும்பத்திற்கும் தலா ரூ. 5 லட்சம்வழங்கப்பட்டது.
புதுமைப்பித்தனின் 97 சிறுகதைகள், 50 கட்டுரைகள், முசோலினி மற்றும் ஹிட்லர் குறித்து எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்கள், பல்வேறுமொழிபெயர்ப்புக் கட்டுரைகள் ஆகியவை நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.
பிரபல எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் தங்கைதான் கு.ப.ரா. சேது அம்மாள். தற்போது 94 வயதாகும் அவர், 119 சிறுகதைகள், எட்டுநாவல்கள், 4 சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு மத சம்பந்தமான நூல்கள், அகில இந்திய வானொலியில் ஆற்றிய 10 உரைகள் ஆகியபடைப்புகளை வைத்துள்ளார்.
தனது குடும்பம் மிகவும் வறுமையில் வாடுவதாகவும், எனவே தனது படைப்புகளை நாட்டுடமையாக்கி அதற்கு ஈடான தொகையை தனதுசகோதரர் கு.ப.ராஜகோபாலனின் மகன் பட்டாபிராமனிடம் வழங்குமாறு சேது அம்மாள் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதை ஏற்று அவரது நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டள்ளன.
இரண்டு எழுத்தாளர்களும் அந்தக் காலத்தின் பிரபல இலக்கிய இதழான மணிக்கொடி பத்திரிக்கையில் எழுதி வளர்ந்தவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications