தேர்தல் கமிஷனுக்கு எதிராக திமுக நாளை போராட்டம்: தீவிர ஏற்பாடுகள்
சென்னை:
தேர்தல் கமிஷனையும், மாநில அரசையும் கண்டித்து சென்னையில் வரும் 18ம் தேதி திமுக நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரும்அளவிலான திமுகவினர் கலந்து கொள்வர் என்று தெரிகிறது.
இந்தப் போராட்டம் பெறும் வெற்றியடைய வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதனால் சென்னை மாவட்டதிமுக நிர்வாகிகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வட்ட அளவிலான கூட்டங்கள் நடத்தி திமுகவினரை போராட்டத்தில் கலந்து கொள்ளச்செய்ய தயார் செய்து வருகின்றனர்.
சைதாப்பேட்டை இடைத் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததைத் கண்டித்து சமீபத்தில் மாநிலம் முழுவதிலும் திமுக சார்பில் கண்டனஆர்ப்பாட்டம் நடந்தது. ஆனால் திமுக தலைமைக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக திமுகவினர் பெருமளவில் கலந்து கொள்ளவில்லை.
பல இடங்களில் ஆட்கள் வராத காரணத்தால் ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து கோபமடைந்த திமுக தலைவர் கருணாநிதி,முடிந்தால் கட்சியில் இருங்கள், இல்லாவிட்டால் விலகி விடுங்கள் என்று ஆவேசமாக அறிக்கை விட்டார்.
இந் நிலையில், வரும் 18ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. ஏற்கனவே நடந்தது போல கூட்டம் இல்லாமல்தர்மசங்கடம் ஏற்படுவதைத் தடுக்க ஏராளமான திமுகவினரை இந்த போராட்டத்தில் பங்கேற்க வைக்க கட்ச்த் தலைமை நடவடிக்கை எடுத்துவருகிறது.
திமுக இளைஞர் அணியின் அவசர ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டது. தென் சென்னை மாவட்ட திமுகஅமைப்பாளரும், சைதைதொகுதியில் போட்டியிட்டவருமான மா.சுப்ரமணியம் இதற்குத் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சைதை தேர்தல் முறைகேடுகள், தேர்தல் கமிஷன், மாநில அரசு ஆகியவற்றைக் கண்டித்து தங்கசாலை மணிக்கூண்டு எதிரில்இன்று (17ம் தேதி) கண்டன பொதுக் கூட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதில் திரளான பேர் கலந்து கொள்ள வேண்டும் என கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டது.
அதேபோல நாளை சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் கட்சியின் பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி தலைமையில்நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், சென்னை மாவட்டத்திற்குள் உள்ள ஒவ்வொரு பகுதியிலிருந்தும் குறைந்தபட்சம் 500 பேர் கலந்துகொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications