கலாமை ஜனாபதியாக்குவது சரியல்ல: லட்சுமி செகல்
டெல்லி:
இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் உச்சகட்டத்தில் உள்ள நிலையில் அணு விஞ்ஞானியான டாக்டர் அப்துல்கலாமை ஜனாதிபதியாக்குவது உலக அளவில் இந்தியா குறித்து தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் எனஅவரை எதிர்த்துப் போட்டியிடும் கேப்டன் லட்சுமி செகல் கூறினார்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள கேப்டன் லட்சுமி செகல் வரும் 21ம் தேதி மனுத் தாக்கல்செய்கிறார்.
இடதுசாரிக் கட்சிகளும் மதசார்பற்ற ஜனதா தளமும் இணைந்து அவரது வேட்பு மனுவை முன்மொழிய உள்ளன.
இன்று டெல்லியில் நிருபர்களிடம் பேசிய லட்சுமி செகல் கூறியதாவது:
விஞ்ஞானி அப்துல் கலாமின் அறிவியல் சாதனைகளைக் கண்டு அதிசயித்த மக்களில் நானும் ஒருவள். ஆனால்,நான் எதிர்த்துப் போட்டியிடுவது பா.ஜ.கவுக்கு எதிராகத் தான். கலாமுக்கு எதிராக என்னிடம் எந்தக் கருத்தும்இல்லை.
மதவாதம் தான் இன்று தேசத்துக்கு எதிரான மிகப் பெரிய பிரச்சனை. மதவாத பா.ஜ.க. தனது நாட்டின்ஜனாதிபதியாக அணு விஞ்ஞானியைக் கொண்டு வந்து உலகுக்கு இந்தியா குறித்து தவறான கண்ணோட்டத்தைஏற்படுத்த முயல்கின்றனர்.
அவரை எதிர்த்து நின்று நான் தோற்கப் போகிறேன். ஆனாலும் போட்டி போட்டி தானே என்றார்.
அவருக்கு ஆதரவாக அனைத்து மாநிலங்களிலும் பிரச்சாரம் செய்யவும் இடதுசாரிக் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.குஜராத்தில் இருந்து இந்தப் பிரச்சாரத்தை தொடங்கவும் திட்டமிட்டுள்ளன. வரும் 25ம் தேதி குஜராத் செல்லும்லட்சுமி செகல் அங்கு நிவாரண முகாம்களைப் பார்வையிடுகிறார். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துப் பேசுகிறார்.
பின்னர் எம்.பி., எம்.எல்.ஏக்களை சந்தித்து ஆதரவு கோருகிறார். பின்னர் பிகார், மேற்கு வங்கம் சென்று தனக்குஆதரவு திரட்டுகிறார்.
இது தொடர்பாக இன்று மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகள்ஆலோசனை நடத்தின.
லட்சுமி செகலும் தமிழர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. நேதாஜியின் ராணுவத்தில் இணைந்து தேசவிடுதலைக்காக போராடிய வீரப் பெண்மணி இவர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications