சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்குகளில் தொடர் கொள்ளை
ஸ்ரீபெரும்புதூர்:
சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் இரு பெட்ரோல் பங்குகளில் வட நாட்டுக் கொள்ளை கும்பல் தாக்குதல்நடத்தி ரூ. 2.25 லட்சத்தைக் பறித்துச் சென்றது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே நேற்று நள்ளிரவில் இந்தச் சம்பவம் நடந்தது. பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ளபூங்காவனம் என்ற பெட்ரோல் பங்குக்கு நள்ளிரவில் ஒரு வெள்ளை நிற மாருதி கார் வந்தது. அப்போது அந்தபங்கில் 8 ஊழியர்கள் இருந்தனர்.
காரிலிருந்து இறங்கிய 7 பேர் துப்பாக்கிகள் மற்றும் கத்திகளைக் காட்டி ஊழியர்களை கட்டடத்துக்கு உள்ளேதள்ளிச் சென்றனர். இந்தியில் பேசிய அவர்கள் ஊழியர்களைத் தாக்கி ஒரு அறையில் போட்டுப் பூட்டினர்.
அவர்களை எதிர்த்துக் கேள்வி கேட்ட இருவரை அக் கும்பல் கத்தியால் தாக்கியது. இதில் அவர்கள்காயமடைந்தனர். இதையடுத்து அந்தக் கும்பல் பணப் பெட்டியின் சாவியைப் பறித்துக் கொண்டு அதைத் திறந்துஅதிலிருந்த ரூ. 1.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு தப்பியது.
அறையில் போட்டுப் பூட்டப்பட்ட ஊழியர்கள் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்தபோது அந்தக் கும்பல்தப்பிச் சென்றிருந்தது.
இன்னொரு பங்கிலும்...
அடுத்ததாக அந்த வட நாட்டுக் கொள்ளைக் கும்பல் அங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் மெட்ராஸ் ரிபைனரீஸ்நிறுவனத்துக்கு சொந்தமான ஜூப்லி பெட்ரோல் பங்குக்கு வந்தது.
அங்கும் தங்கள் கைவரிசையைக் காட்டியது. இங்கு அப்போது 13 ஊழியர்கள் பணியில் இருந்தனர். அந்தஊழியர்களை துப்பாக்கி மற்றும் கத்தியைக் காட்டி அந்தக் கும்பல் மிரட்டியது.
சிலர் எதிர்த்துக் கேள்விகேட்டனர். அவர்களை அங்கு கிடந்த விறகுக் கட்டைகளால் கொள்ளைக் கும்பல் அடித்தது.இதையடுத்து ஊழியர்கள் நிலைகுலைந்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் ஆயில் ரூமில் போட்டு பூட்டியது.
பின்னர் அங்கிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்த கேசியரை அடித்து எழுப்பி அவரிடம்பணத்தையும் பறித்துச் சென்றது. இந்த பங்க்கில் மொத்தம் ரூ. 71,000 கொள்ளை அடிக்கப்பட்டது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications