சென்னையில் விரைவில் ஏ.சி. டவுன் பஸ்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை நகரில் விரைவில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஏ.சி. டவுன் பஸ்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

சென்னை பாரிமுனை பேருந்து நிலையத்திலிருந்து, தாம்பரம் வரை செல்லும் இந்த பஸ்களில் ரூ. 25 கட்டணமாக இருக்கும்.

சென்னை நகரில் பஸ் போக்குவரத்தில் உள்ள கோளாறுகள், பிரச்சினைகள் மற்றும் போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டு வரும் மேம்பாட்டுநடவடிக்கைகள் குறித்த அதிகாரிகள், பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் சென்னை பெருநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் சுவரண் சிங் கூறுகையில்,

தாம்பரம் முதல் பாரினை வரை ஏ.சி. பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளோம். இந்த பஸ்களில் கட்டணம் ரூ. 25 ஆக இருக்கும். முதலில்சோதனைரீதியில் சில பஸ்கள் இந்த ரூட்டில் விடப்படும். அதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து பேருந்துக் எண்ணிக்கைஅதிகரிக்கப்படும்.

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் விரைவில் 200 புதிய பஸ்கள் சென்னையில் விடப்படவுள்ளன. 50 பஸ்களுக்கு பாடி கட்டும்வேலை முடிந்து விட்டது. விரைவில் மீதமுள்ள 150 பஸ்களுக்கும் பாடி கட்டப்பட்டு விடும்.

அதன் பிறகு மோசமான நிலையில் உள்ள பழைய பஸ்களை வாபஸ் பெற்றுவிட்டு புதிய பஸ்கள் புழக்கத்திற்கு வரும்.

வயதானோர், பெண்கள், உடல் ஊனமுற்றோர் ஆகியோர் பஸ்களில் வசதியாக ஏறும் வகையில், புதிய வடிவமைப்புடன் 20 பஸ்கள்தயாராகி வருகின்றன. இவையும் விரைவில் புழக்கத்திற்கு வரும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+