சாப்பாடு பிரச்சனை: அதிகாரிகளை "அர்ச்சனை" செய்த துணை சபாநாயகர்
பெரம்பலூர்:
அரசு விழாவின் போது மதிய உணவு ஏற்பாடுகளைச் சரியாகச் செய்யாத அதிகாரிகளை துணை சபாநாயகரானஅருணாசலம் கெட்ட வார்த்தைகளாலேயே திட்டியதாகப் புகார் எழுந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் பகுதியில் உள்ள கிராமங்களின் வி.ஏ.ஓ. அலுவலகக் கட்டடங்கள் திறப்பு விழாஉள்ளிட்ட பல அரசு விழாக்களில் சமீபத்தில் அருணாசலம் கலந்து கொண்டார்.
காலையில் நடந்த விழாக்களைத் தொடர்ந்து மதிய உணவுக்காக பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் உள்ளஒரு ஹோட்டலுக்கு அருணாசலம் உள்ளிட்ட அதிமுகவினரும் அதிகாரிகளும் வந்தனர்.
இவர்களுக்காக ஒரு ஏ.சி. அறை, ஐந்து வி.ஐ.பி. சாப்பாடு மற்றும் 20 சாதாரண சாப்பாடு ஆகியவற்றுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் இவர்கள் வந்ததால் ஒரே ஒரு சாப்பாடு மட்டும் தான் இருப்பதாக ஹோட்டல் தரப்பில்தெரிவிக்கப்பட்டது. ஆனால் மற்றவர்களுக்கு டிபன் செய்து தருகிறோம் என்றும் ஹோட்டல் உரிமையாளர்கூறினார்.
இதற்கிடையே இந்த விஷயம் அருணாசலம் காதுக்குச் சென்றது. கடும் கோபமடைந்த அவர், மதிய உணவுஏற்பாட்டைக் கவனித்துக் கொண்ட ஆலத்தூர் பஞ்சாயத்து யூனியன் கமிஷனர்கள் அசன் முகம்மது, தனராஜ், கான்உள்ளிட்ட பல அதிகாரிகளையும் அழைத்து கடுமையாகத் திட்டினார்.
எப்போதுமே சாதாரண கோபம் வந்தாலும் சரளமாகக் கெட்ட வார்த்தைகளை அவிழ்த்து விடும் அருணாசலம்,இப்போதும் அதிகாரிகளைக் கடும் கெட்ட வார்த்தைகளால் "அர்ச்சனை" செய்தார். அவர்களை டிரான்ஸ்பர் செய்துவிடப் போவதாகவும் அருணாசலம் மிரட்டினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் லக்கானியிடம் இதுகுறித்துப் புகார் கூறினர்.கலெக்டர் அவர்களைச் சமாதானப்படுத்தினார்.
அனைவர் முன்னிலையிலும் இந்தச் சம்பவம் நடந்ததால் ஹோட்டலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர்இருந்த ஒரே ஒரு சாப்பாடு அருணாசலத்திற்கு வழங்கப்பட்டது. மற்ற அனைவரும் டிபனையே சாப்பிட்டனர்.
இதற்கிடையே அதிகாரிகளுக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து ஆலோசித்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம்மற்றும் என்.ஜி.ஓக்கள் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் அருணாசலத்தைக் கண்டித்துப் போராட முடிவுசெய்துள்ளனர்.
இது ஒன்றும் புதிதல்ல:
சாப்பாட்டுக்காக அருணாசலம் சண்டை போடுவது ஒன்றும் புதிதல்ல என்றும் தெரிய வந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் அரியலூர் பயணியர் விடுதியில் சாப்பாடு தயார் செய்யவில்லை என்பதற்காகதாசில்தார் மற்றும் வி.ஏ.ஓக்கள் ஆகியவர்களை அழைத்து வைத்து "டோஸ்" கொடுத்துள்ளார் அருணாசலம்.
காது கொடுத்துக் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகளால் தங்களைத் திட்டியதால் அதை எதிர்த்து அதிகாரிகள்ஸ்டிரைக் செய்யத் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் அப்போதைய கலெக்டரான ராகேஷ் குமார் யாதவ் அதிகாரிகளை அழைத்து, இனிமேல் துணை சபாநாகர்வந்தால் அறை மட்டுமே ஏற்பாடு செய்யுங்கள். சாப்பாடு வழங்க அரசு பணம் தராது என்று கூறி சமாதானப்படுத்திவிட்டார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications