உயிர்களை கொல்லும் மீன் வண்டிகளுக்கு சென்னையில் தடை
சென்னை:
சென்னை நகரில் பல அப்பாவி பொது மக்களின் உயிர்களை பழி வாங்கி வரும் மீன் பாடி வண்டிகளுக்கு போலீஸார் புதியகட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
சென்னையில் என்பீல்ட் என்ஜின் பொருத்திய 3 சக்கர, 5 சக்கர சைக்கிள்களின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சாதாரண கால் மிதி வண்டியான இதில், என்பீல்ட் என்ஜின் அல்லது ஹோண்டா என்ஜின்களை பொருத்தி பலர் மோட்டார் சைக்கிள்போல ஓட்டி வருகிறார்கள்.
ஆனால், இந்த வண்டிகளில் பிரேக் மட்டும் சைக்கிள் பிரேக் தான். அசுர வேகத்தில் வரும் இந்த வண்டிகளை அதை ஓட்டுபவரேநினைத்தாலும் உடனே நிறுத்த முடியாது.
இதனால் இந்த வண்டிகளில் அடிபட்டு பல அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலும் ரெளடிகள் தான் இந்தவண்டிகளை ஓட்டி வருகின்றனர். இவர்கள் அடுத்தவர்கள் பற்றியோ, அருகில் வரும் வாகனங்கள் பற்றியோ கவலையேபடமாட்டார்கள். இந்த வண்டி வந்தால் மற்றவர்கள் தாங்களாகவே ஒதுங்கிக்கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு திமிருடன்இந்த வண்டிளை ஓட்டி வருகின்றனர்.
மீனவர்கள், குப்பங்களின் ஓட்டுக்களை மனதில் வைத்துக் கொண்டு இந்த வண்டிகளை அரசும் கண்டுகொள்ளாமல் இருந்துவந்தது.
பெரும்பாலும் மீன் ஏற்றிச் செல்வதற்காகத் தான் இந்த வண்டிகள் முதலில் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், சேரிப் பகுதிஆட்களையும், கூடை வியாபாரிகளையும் காசு வாங்கிக் கொண்டு இதில் கூட்டிச் செல்ல ஆரம்பித்துள்ளார்கள்.
மிக பயங்கர வேகத்தில் இவற்றை ஓட்டுவதால் பல நேரங்களில் இந்த வண்டிகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.
பலரின் உயிரை எடுக்கும் எமனாக இருக்கும் இந்த மீன் பாடி வண்டிகளை தடை செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில்வழக்குத் தொடரப்பட்டது.
இந் நிலையில், இந்த வண்டிகளுக்கு அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சென்னை நகரின் முக்கியமான 8 சாலைகளில்இந்த மீன்பாடி வண்டிகளை ஒட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்கள் அமர்ந்து செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது. 2 பேருக்கு மேல் வண்டியில் இருக்கக் கூடாது. மேலும்பொருட்கள் அதிக அளவில் வெளியில் நீட்டியபடி கொண்டு செல்லக் கூடாது என்றும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில்தான் வண்டியை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தடை விதிக்கப்பட்டுள்ள சாலைகள்:
1.கிண்டி கத்திப்பாரா சந்திப்பு தொடங்கி கொடி மரச் சாலை வரையிலான அண்ணா சாலை.
2.கோயம்பேடு ரவுண்டானா தொடங்கி முத்துச்சாமி பாலம் வரையிலான ஈ.வே.ரா பெரியார் சாலை.
3.அண்ணா சாலை ரோட்டரி முதல் காந்தி சாலை வரையிலான டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை.
4.தெற்கு கேனால் பேங்க் சந்திப்பு முதல் போர் நினைவுச் சின்னம் வரையிலான சாந்தோம் நெடுஞ்சாலை.
5.போர் நினைவுச் சின்னம் முதல் கிளைவ் பேட்டரி வரையிலான ராஜாஜி சாலை.
6.கிண்டி ஹால்டா சந்திப்பு முதல் அடையாறு சந்திப்பு வரையிலான சர்தார் பட்டேல் சாலை.
7.சேத்துப்பட்டு சந்திப்பு முதல் அண்ணா மேம்பாலம் வரையிலான நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை.
8.வடபழனி சந்திப்பு முதல் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை வரையிலான கோடம்பாக்கம் நெடுஞ்சாலை.
இந்த சாலைகளில் மீன் பாடி வண்டிகளை இயக்கக் கூடாது என்று போலீஸார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வண்டிகளை ஏன் முழு அளவில் தடை செய்யக் கூடாது?
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications