ஜெயலலிதாவுக்கு பாரத மகளிர் விடுதலைப் புலிகள் கொலை மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்:
அடுத்த வாரம் திருப்பூர் வரும் முதல்வர் ஜெயலலிதாவைக் கொல்லப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பாரத பெண்கள் விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் இந்தக் கொலை மிரட்டலை விடுத்துள்ளது.
இதையடுத்து திருப்பூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவரைக் கொல்வதற்காக 16 பேர்கொண்ட குழு உருவாக்கப்பட்டிருப்பதாக கோவை நிருபர்கள் சங்கத்துக்கு ஒரு கடிதம் வந்தது.
இதையடுத்து போலீசாரிடம் அந்தக் கடிதம் ஒப்படைக்கப்பட்டது. அதே போல கல்பாக்கம் அணு மின் நிலையத்தைதகர்க்கப் போவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
கோவை உப்பிலியாபுரம் தபால் நிலையத்தில் இந்தக் கடிதம் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த பாரத மகளிர்விடுதலைப் புலிகள் இயக்கம் புதிய பெயராக உள்ளது. இந்த இயக்கம் குறித்து எந்த விவரமும் போலீசாரிடம்இல்லை.












Click it and Unblock the Notifications