சகட்டுமேனிக்கு லஞ்சம் வாங்கிய நீதிபதி
பெரம்பலூர்:
சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள பெரம்பலூர் செஷன்ஸ் நீதிபதி ராஜமாணிக்கம் வாங்கிய லஞ்சம், செய்த ஊழல்கள் குறித்துபரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரம்பலூர் மாவட்ட செஷன்ஸ் நீதிபதியாக இருந்தவர் வி.சி.ராஜமாணிக்கம். இவர் தீர்ப்பு கூறுவதற்கு லஞ்சம் வாங்குவதுஅதிகரித்து வருவதாக வக்கீல்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் உயர் நீதிமன்றத்திற்குப் புகார்கள் குவிந்தவண்ணம்இருந்தன.
உச்ச கட்டமாக 80க்கும் மேற்பட்ட வக்கீல்கள், தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிக்கு மனு ஒன்றை அனுப்பினர். அதைத்தொடர்ந்தே ராஜமாணிக்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ராஜமாணிக்கம் மீது வக்கீல்கள் சுமத்தியுள்ள புகார்கள்:
அரசு வக்கீல் பிச்சைபிள்ளை உள்ளிட்ட 8 வக்கீல்களுடன் சேர்ந்து லஞ்சம் வாங்கி வந்தார் ராஜமாணிக்கம். சில மாதங்களுக்குமுன்பு கோர்ட்டில் துணைப் பதிவாளராக பணியாற்றி வந்த வேதராஜூ என்பவரை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கைது செய்தனர்.
ஆனால் 2 நாளில் அவர் விடுதலையாகி வந்தார். அவரை ஜாமீனில் விடுவிக்க வேதராஜுவிடமிருந்து, ராஜமாணிக்கம் ரூ. 1லட்சம் லஞ்சம் வாங்கினார்.
அதேபோல, ஒரு கொலை முயற்சி வழக்கில் தமாகா பிரகர் ஒருவருக்கு ராஜமாணிக்கம் ஜாமீன் கொடுத்தார். ஆனால் இந்தவழக்கில் உயர்நீதிமன்றத்தில் மட்டுமே ஜாமீன் பெற முடியுமாம். ஆனால் ரூ. 50,000 பெற்றுக் கொண்டு அந்த பிரமுகரைஜாமீனில் வெளியே விட்டுள்ளார் ராஜமாணிக்கம்.
இதுதவிர கள்ளச்சாராய வழக்குகளில் விடுதலை செய்ய வேண்டுமானால் தலா ரூ. 1000 ராஜமாணிக்கத்திற்குப் போய் விடவேண்டுமாம்.
போலீஸாருக்கு ரூ. 500 கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் விடுதலை.
பெரம்பலூர் கோர்ட்டில் தலா ரூ. 1 லட்சம் வரை வாங்கிக் கொண்டு சமீபத்தில் 10 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதிலும்ராஜமாணிக்கத்தின் திருவிளையாடல் நடந்துள்ளதாம்.
ராஜமாணிக்கம் மீது இப்படிப் பகிரங்கமாக புகார்கள் கூறப்பட்டதன் விளைவாகவே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications