கண்ணகி சிலை: தமிழறிஞர் மா.நன்னன் வழக்கு
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில்வைக்க வேண்டும் என்று கோரி தமிழறிஞர் மா.நன்னன் தாக்கல் செய்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில்விசாரணைக்கு வந்தது.
நன்னன் உள்பட 4 பேர் கண்ணகி சிலை தொடர்பாக வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர். இன்று நன்னனின் மனுவிசாரணைக்கு வந்தது.
தனது மனுவில் நன்னன் கூறியிருப்பதாவது:
மெரீனா கடற்கரையில் இருந்த கண்ணகி சிலையை தேவையில்லாமல் அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டனர்.கடந்த 1968ம் ஆண்டு இந்த சிலை அங்கு நிறுவப்பட்டது. அதனால் யாருக்கும் எந்த இடைஞ்சலும் ஏற்படவில்லை.ஆனால், போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக இப்போது அரசு கூறுகிறது.
எம்.ஜி.ஆர்., ராஜிவ் காந்தி ஆகியோரின் சிலைகளும் முக்கியமான சாலைகளில் தான் வைக்கப்பட்டுள்ளன.இதனால் யாருக்கும் எந்த இடைஞ்சலும் ஏற்படவில்லை.
கண்ணகி சிலையையும் மீண்டும் மெரீனா கடற்கரையில் வைப்பதால் யாருக்கும் இடையூறு வராது. ஆனால்,சிலையை மீண்டும் வைக்க அமைக்கப்பட்ட கமிட்டி கல்லூரி உள்பட 6 இடங்களை அரசுக்கு பரிந்துரைசெய்துள்ளது.
இதனால் அந்தக் கமிட்டி மீதே சந்தேகம் எழுகிறது. அரசுக்கு ஆதரவாக அந்தக் கமிட்டி செயல்படுவதாகத் தான்நினைக்கத் தோன்றுகிறது. சிலையை மீண்டும் பழைய இடத்திலேயே வைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்என்று கூறியுள்ளார் நன்னன்.
இந்த வழக்கை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி முருகேசன் அடங்கிய டிவிசன் பெஞ்ச்விசாரித்தது. வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications