அமைதி பேச்சு நடந்தால் அது உலக அதிசயம் தான்: புலிகள்
கொழும்பு:
தாய்லாந்து பேச்சுவார்த்தைகளின் போது விவாதாகிகப்படவுள்ள விஷயங்கள் குறித்து விடுதலைப் புலிகளுக்கும்இலங்கை அரசுக்கும் இடையே பெரும் கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளன.
இலங்கை அரசு கூறியுள்ள பேச்சுவார்த்தைக்கான திட்டங்களில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று புலிகள்கூறியுள்ளனர். இதனால் ஜூலை மாதம் பேச்சு நடப்பது நிச்சயமில்லை என்று புலிகள் தெரிவித்துள்ளனர்.
அப்படியே பேச்சுவார்த்தை நடந்தாலும் அது உலக அதிசயமாகத் தான் இருக்கும் என்றும் அவர்கள் கூறினர்.
லண்டனில் இருந்து வெளியாகும் புலிகளின் சுடர் ஒளி பத்திரிகையில்,
முதலில் போர் நிறுத்த ஒப்பந்தில் கூறப்பட்டுள்ள விஷயங்களை இலங்கை அரசு முழுமையாக நிறைவேற்றினால்தான் அடுத்த கட்டத்துக்கே போக முடியும். அதற்குள் பேச்சுவார்த்தைக்கான செயல் திட்டத்தை தயாரிக்க முடியாதுஎன்று கூறப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பேச்சு தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், தொடர்ந்து அதுதாமதமாகி வருகிறது.
போர் நிறுத்தத்தின்போது கொடுக்கப்பட்ட உறுதிமொழிப்படி முதலில் தங்கள் மீதான தடையை நீக்க வேண்டும்என்று புலிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். அதே போல தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவம் இன்னும்முழுமையாக வெளியேறாமல் இருப்பதையும் புலிகள் கண்டித்துள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கான செயல் திட்டம் (அஜென்டா) முடிவு செய்யப்பட்டுவிட்டதாக வரும் செய்திகளில்உண்மையில்லை என்று கூறியுள்ள புலிகள் அது தொடர்பாக நார்வே தூதுவர்களிடம் நாங்கள் இந்த விஷயத்தில்எதுவுமே பேசவில்லை என்றும் கூறியுள்ளனர்.
தடை நீக்கம் உள்ளிட்ட விஷயங்கள் தீராத வரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படாது என புலிகள்தெரிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தை தாமதமாவதற்கு இலங்கை அரசு தான் காரணம் என புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். முதலில் இதில் தீவிரம் காட்டிய அரசு இப்போது பேச்சுவார்த்தையில் அக்கறையேஇல்லாமல் இருப்பதாகவும் கூறினார்.












Click it and Unblock the Notifications