நாளை வரை அவகாசம்: ஸ்டாலின் மேயர் பதவி தப்புமா?
சென்னை:
மு.க.ஸ்டாலினின் மேயர் பதவி இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவுக்கு வருகிறது. ஒரு நபருக்கு ஒரு பதவி என்ற சட்டத்தை எதிர்த்துஉயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் இன்று தான் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
இந்தச் சட்டத்தை அரசிதழில் ஜூன் 4ம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. வெளியிடப்பட்ட நாளை கணக்கில் எடுக்க முடியாது என்றநீதிமன்றம் கூறியுள்ளதால் நாளை வரை ஸ்டாலின்ன் பதவியைப் பறிக்க முடியாது.
இன்று நீதிமன்றம் தரும் தீர்ப்பைப் பொருத்தே ஸ்டாலின் பதவி தப்புமா இல்லையா என்பது தெரியவரும்.
தமிழக அரசு சில மாதங்களுக்கு முன்பு சட்டசபையில் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. எம்.எல்.ஏ, எம்.பி. ஆக இருப்பவர்கள் வேறுஉள்ளாட்சிப் பதவிகளில் இருக்கக் கூடாது என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.
அந்த மசோதாவுக்கு ஆளுநர் ராம் மோகன் ராவ் ஒப்புதல் கொடுத்து சமீபத்தில் கையெழுத்திட்டார். இதைத் தொடர்ந்து சென்னைமேயராகவும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவாகவும் இருக்கும் ஸ்டாலினுக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது.
அதில் 15 நாள் "கெடு" கொடுத்து அதற்குள் ஒரு பதவியை ராஜினாமா செய்யும்படி கோரப்பட்டிருந்தது. இல்லாவிட்டால் மேயர் பதவிதானாகவே ரத்தாகி விடும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
ஸ்டாலின் பேட்டி:
ஆனால் அந்த நோட்டீஸை பெற ஸ்டாலின் மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், இதை ஸ்டாலின் மறுத்துள்ளார். நேற்றுசெய்தியாளர்களிடம் பேசிய அவர்,
எனக்கு நோட்டீசே வரவில்லை. ஆணையருக்குத் தான் இது தொடர்பாக கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தை நான் கையெழுத்திட்டு வாங்கிஆணையருக்கு அனுப்பி வைத்தேன். இதன் பின்னர் அந்தக் கடிதத்தோடு தனது குறிப்பையும் சேர்த்து பின் செய்துஅதை ஆணையர் எனக்கு அனுப்பினார்.
அதில், புதிய சட்டத்தின் கீழ் நான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பதவி பறிக்கப்படும்என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால், இந்தக் கடிதம் எனக்கு வந்தபோது நான் அங்கு இல்லை. என் அலுவலக ஊழியர் தான் அதை வாங்கிவைத்திருந்தார். வெள்ளிக்கிழமை இரவு அந்தக் கடிதத்தை மாநகராட்சியின் செயலாளர் அதை என் வீட்டுக்குக்கொண்டு வந்தார்.
மாநகராட்சி விவகாரம் தொடர்பான கடிதத்தை ஏன் வீட்டுக்கு அனுப்பினீர்கள் என்று கேட்பதற்காக நேற்றுமாநகராட்சிக்கு வந்தேன். ஆனால், ஆணையர் கலைவாணன் வரவில்லை. பயத்தினால் அவர் வரவில்லையாஎன்று எனக்குத் தெரியாது.
நான் மேயர் பதவியில் நீடிக்கலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் கூட மாநகராட்சியை மன்றத்தையே கூடகலைத்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. இந்த ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்.
அதே நேரம் நீதிமன்றத் தீர்ப்பு எனக்கு எதிராக இருந்தால் துணை மேயரையே மேயராக்க சட்டம் கொண்டுவந்துவிடுவார்கள் என்றார் ஸ்டாலின்.
இன்று முக்கிய தீர்ப்பு:
தமிழக அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து வக்கீல் உதயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவருக்காகபிரபல வக்கீல் விஜயன் ஆஜராகியுள்ளார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இன்றுடன் ஸ்டாலினுக்கு அரசு விதித்துள்ள கெடுவும் முடிவடைகிறது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பைப் பொருத்தே ஸ்டாலின் பதவி தப்புமா, இல்லையா என்பது குறித்துத் தெரிய வரும். தீர்ப்பு ஸ்டாலுக்கு எதிராகஇருந்தால் நாளை அவரது பதவி பறிக்கப்படும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications