கராத்தேவுக்கு வந்த வாழ்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகராட்சியின் புதிய மேயராக துணை மேயர் கராத்தே தியாகராஜனுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஏற்பாடுகள்நடந்து வருகின்றன.

சென்னை மாநகராட்சி மேயர் மு.க.ஸ்டாலினிடமிருந்து மேயர் பதவி பறிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து தற்போது மேயர் பதவிகாலியாக உள்ளது. மாநகராட்சி விதிகளின்படி துணை மேயர், தற்காலிக மேயர் பொறுப்பை ஏற்க முடியும்.

இதையடுத்து கராத்தே தியாகராஜனுக்கு மேயர் பொறுப்பை ஒப்படைக்கவும், அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவும்ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ஆணையர் கலைவாணன் பேட்டி:

மாநகராட்சி ஆணையர் கலைவாணன் இந்தத் தகவலைத் தெவித்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

நீதிமன்றத் தீர்ப்புப்படி மேயரின் பதவி பறிக்கப்பட்டுவிட்டதால் துணை மேயர் கராத்தே தியாகராஜன் தான் இனிமேயர் பொறுப்பை வகிப்பார்.

மாநகராட்சியின் புதிய கமிஷ்னராக பொறுப்பேற்ற கலைவாணன் வந்தது முதலே ஸ்டாலினை ஒதுக்கஆரம்பித்தார். கராத்தேயுடன் நட்புடன் இருந்து வரும் அவர் இன்று நிருபர்களிடம் பேசுகையில், மேயரின் பதவிகாலியாகிவிட்டதாக அரசிடம் இருந்து எனக்கு கடிதம் வந்துவிட்டது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற அரசு வக்கீலின் கடிதத்துக்கு காத்திருக்கிறோம். கடிதம் வந்தவுடன்துணை மேயரிடம் மேயரின் பொறுப்புகளை வழங்கும் உத்தரவை மாநகராட்சி பிறப்பிக்கும். இதற்குமாநகராட்சியின் விதியின் 38 (ஏ)வது பிரிவில் வழிவகை உள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் ஒற்றுமையாக உள்ளனர், துணை மேயரும் நல்லபடியாக அதிகாரிகளுடன்ஒத்துழைக்கிறார். இதனால் அவரது கையில் அதிகாரம் வந்தால் சென்னைக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தமுடியும்.

தனக்கு அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்று ஸ்டாலின் கூறுவது தவறு. அவர் தான் எந்தப் பணியையும்செய்யாமல் இருந்து வந்தார் என்றார் கலைவாணன்.

ஜெயலலிதா முடிவு என்ன?

இதற்கிடையே, கராத்தே தியாகராஜனுக்கு மேயர் பொறுப்பை ஒப்படைப்பது தொடர்பாக ஜெயலலிதா இன்னும் முடிவு தெவிக்கவில்லைஎன்று தெரிகிறது. இதனால் கராத்தே தியாகராஜன் தரப்பு குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.

ஜெயலலிதாவிடமிருந்து முடிவு தெரியாத காரணத்தால், முதல்வர் உத்தரவுப்படி நடந்து கொள்வதாக கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.

சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் விறுவிறுவென அதிமுகவில் வளர்ந்தார். அவருக்கு இந்தப் பதவியை சசி தரப்பில்வாங்கித் தந்துவிடுவார்கள் என்று நம்மப்படுகிறது.

சென்னை மாநகராட்சியின் தற்காலிக மேயர் பொறுப்பை ஏற்க துணை மேயர் கராத்தே தியாகராஜன் நீண்ட நாட்களுக்கு முன்பே தயாராகிவிட்டார்.

சென்னையில் எந்தப் பிரச்சினை தீர்ந்தாலும் மேயராக இருந்த ஸ்டாலினுக்கும், துணை மேயர் கராத்தே தியாகராஜனுக்கும் இடையிலானபிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டதே இல்லை. கடைசி வரை இரண்டு பேரும் முறைத்துக் கொண்டே இருந்தார்கள்.

தற்போது ஸ்டாலின் பதவி முடிவுக்கு வந்துள்ள நிலையில் கராத்தே தியாகராஜனே மேயர் பொறுப்பை வகிக்கவுள்ளார். புதிய சட்டம்இயற்றப்பட்ட மறு நாளே அதற்கான நடவடிக்கைகள் துவங்கி விட்டதாம்.

கராத்தே தியாகராஜனின் அறை புதுப்பிக்கப்பட்டு, புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேயர் அறையில் இருக்கக் கூடிய அனைத்துவசதிகளும் கராத்தேவின் அறையிலும் உள்ளன. புதிய இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

மேயர் அறைக்குச் செல்லும் பல கோப்புகள் கராத்தே தியாகராஜனின் அறைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. புதிய கமிஷனராகநியமிக்கப்பட்டுள்ள கலைவாணனும், கராத்தே தியாகராஜன் அறையில் அவ்வப்போது ஆஜராகிவிடுகிறார்.

சென்னை மாநகராட்சியில் திமுக கவுன்சிலர்கள் தான் பெரும்பான்மையாக உள்ள நிலையில் அதிமுகவைச் சேர்ந்த கராத்தே தியாகராஜன்மாநகராட்சி மேயர் பொறுப்பை வகிப்பதால் அவ்வப்போது மிகச் சூடான காட்சிகளுக்கு குறைவிருக்காது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+