பாகிஸ்தானுக்கு ஹெலிகாப்டர்கள் விற்கவில்லை: ரஷ்யா
மாஸ்கோ:
பாகிஸ்தானுக்கு எந்த ஆயுதத்தையும் விற்கவில்லை என ரஷ்யா கூறியுள்ளது.
பாகிஸ்தானுக்கு ஹெலிகாப்டர்கள் விற்கும் திட்டம் இருந்ததாகவும் ஆனால், ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர்வாஜ்பாய் பேசிய பிறகு அந்தத் திட்டத்தை ரஷ்யா கைவிட்டுவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானுக்கு 4 ராணுவ ஹெலிகாப்டர்களை ரஷ்யா விற்றுள்ளதாகவும் மேலும் 4 ஹெலிகாப்டர்களை விற்கப்போவதாகவும் பாகிஸ்தான் பத்திரிக்கையில் செய்தி வெளியானது.
இந்தியாவின் மிக நெருங்கிய நாடான ரஷ்யா குறித்து வந்த இந்தச் செய்தி பெரும் அதிர்ச்சியைப் பரப்பியது.
இந் நிலையில் பாகிஸ்தானுக்கு எந்தவிதமான ஆயுங்தங்களையோ ஹெலிகாப்டர்களையோ வழங்கவில்லை எனரஷ்யா கூறியுள்ளது. எதிர்காலத்திலும் பாகிஸ்தனுக்கு எந்த ஆயுதத்தையும் வழங்க மாட்டோம் என ரஷ்யபாதுகாப்புத்துறையின் மூத்த விஞ்ஞானியான இவான் சர்ப்ராசுக் கூறினார்.
இந்தியாவுக்கு நெருக்குதல் தர வேண்டும் என்பதற்காக இது போன்ற செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன என்றுகூறிய அவர் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு நல்ல நிலையை எட்டியுள்ளது.இந்தியாவுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கவும் தயாராக உள்ளது.
இதன் மூலம் ஆயுதங்களுக்காக ரஷ்யாவையே முழுக்க முழுக்க நம்பியிருக்க வேண்டிய அவசியத்தில் இந்தியாஇல்லை. பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை விற்க ரஷ்யாவை இந்தியா அனுமதிக்காது.
ரஷ்யாவிடம் வெறும் ஆயுதம் வாங்கும் நாடாக இந்தியா இல்லை. இணைந்து செயல்பட்டு வரும் நெருங்கிய நட்புநாடாக உள்ளது என்றார்.
எம்.ஐ.- 17 ரகத்தைச் சேர்ந்த 10 ஹெலிகாப்டர்களை பாகிஸ்தானுக்கு வழங்க ரஷ்யா முன் வந்ததாகவும் ஆனால்,2001ம் ஆண்டு நவம்பர் மாதம் மாஸ்கோ சென்ற வாஜ்பாய் இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புடினுடன்பேசியதாகவும் தெரிகிறது.
இந்தியாவின் அதிருப்தியை அப்போது வாஜ்பாய் தெரிவித்ததையடுத்து ராணுவ ஹெலிகாப்டர்கள் விற்பனையைரஷ்யா கைவிட்டுவிட்டதாகவும் தெரிகிறது. இந்த ஹெலிகாப்டர்களுக்கு மிக அதிகமான தொகையைத் தரவும்பாகிஸ்தான் முன் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், ரஷ்யா தங்களுக்கு ஹெலிகாப்டர்கள வழங்கியதாகக் கூறி இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்தபாகிஸ்தான் ராணுவமே இந்தப் பொய்யான செய்தியைப் பரப்பி விட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications