ஊழல் செய்யும் சசிகலா: வழக்குத் தொடரப் போவதாக சுவாமி அறிவிப்பு
சென்னை:
அரசு அதிகாரிகளை மிரட்டிக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் மீதுவிரைவில் வழக்கு தொடரவிருப்பதாக ஜனதா கட்சித் தலைவரான சுப்பிரமணியம் சுவாமி கூறினார்.
சென்னையில் சுவாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு அதிகாரிகளை மிரட்டி வருகிறார். பெருமளவில் பணம் சுருட்டும் வேலையிலும் ஈடுபட்டுள்ளார்.அவரது ஊழல்கள் எல்லை மீறிக் கொண்டிருக்கிறார்.
அவர் மீது விரைவில் மீண்டும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பேன். அவர் மீது வழக்கு போடவுள்ளேன்.
காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி இருக்கும் வரை அக்கட்சிக்கு எதிர்காலமே கிடையாது. தமிழகத்திலும்அக்கட்சிக்கு நல்ல தலைவர்கள் யாரும் இல்லை.
இப்படிப்பட்ட காங்கிரசுடன் போய் தமாகா இணைவது தற்கொலைக்குச் சமமான செயல். இதை தமாகாவின்தலைவரான வாசனிடமே நான் சில மாதங்களுக்கு முன் கூறினேன். அதையும் மீறி தற்போது காரியங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
காங்கிரஸ் ஒரு "ஜீரோ", தமாகா ஒரு "ஜீரோ". இரண்டையும் கூட்டினால் அதற்கு மதிப்பும் ஜீரோ தான். இவைஇரண்டும் சேருவதால் யாருக்கும் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை.
தமிழக மக்களின் நீண்ட காலக் கனவான சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் காட்டி வருகிறதுமத்திய அரசு. சமீபத்தில் ராமநாதபுரம் வந்திருந்த மத்திய கப்பல் துறை அமைச்சர் வேத பிரகாஷ் கோயல், சேதுசமுத்திரத் திட்டம் குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்தத் திட்டம் குறித்து ஆறு முறை ஆய்வு நடத்தப்பட்டு விட்டது. மீண்டும் ஏழாவது முறை ஆய்வுநடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளது திட்டத்தை தாமதப்படுத்துவதாகவே தெரிகிறது.
இதைக் கண்டித்து மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மதிமுக அமைச்சர்களை அக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என்றார் சுவாமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications