பி.ஈ. மாணவர் சேர்க்கை 27ம் தேதி தொடங்குகிறது
சென்னை:
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங் வரும் 27ம் தேதிதொடங்குகிறது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாலகுருசாமி நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர 68,310 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில்1,194 பேர் பி.ஆர்க் (Bachelor of Architecture) பாடப் பிரிவில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கானகவுன்சிலிங் 24ம் தேதி நடக்கும்.
வொகேசனல் தொழிற் பயிற்சிப் பாடங்களில் சேர 1,972 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு 25 மற்றும்26ம் தேதி கவுன்சிலிங் நடக்கும்.
மீதமுள்ள 65,244 மாணவர்களும் பிற பொறியியல் பாடங்களில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.இவர்களுக்கான கவுன்சிலிங் 27ம் தேதி தொடங்கும்.
சென்னை மட்டுமின்றி மதுரை, கோவை, திருச்சி நகரங்களிலும் இந்த ஆண்டு கவுன்சிலிங் நடக்கவுள்ளது. இதனால்எல்லா மாணவர்களும் சென்னைக்கு வர வேண்டிய அவசியம் இல்லை.
இந்த ஆண்டு முதல் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு 6 மாதம் தொழில் பயிற்சி தரவும்முடிவு செய்துள்ளோம்.
ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளதால் டாக்டர் அப்துல் கலாம் பேராசிரியர் பொறப்பில் இருந்துவிடுவிக்கப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து பேராசிரியராக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இதுதொடர்பாக அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.
கலாமின் சேவை எங்களுக்குத் தேவை. பேராசியராக இல்லாவிட்டாலும் பல்கலைக்கழக மாணவர்களுக்குஅனைத்து வகைகளிலும் உதவ அவர் முன் வந்துள்ளார். பேராசிரியராக அவர் தொடர வேண்டும் என்று நாங்கள்விரும்புகிறோம்.
இந்தியாவிலேயே முதல் தரமான பல்கலைக்கழகம் என்ற பெருமையை அண்ணா பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.இதனை உலகின் முதல் தரமான பல்கலைக்கழகமாக மாற்றுவோம் என்றார் பாலகுருசாமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications