அமைதியாய் நடக்குமா தேவகோட்டை தேர் திருவிழா?
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேர்த் திருவிழாவையொட்டி தேவகோட்டை, சாக்கோட்டை பகுதிகளில் உள்ள பொதுமக்கள்லைசென்ஸ் பெற்று வைத்துள்ள துப்பாக்கிகள் உள்ளிட்ட அனைத்து வகையான ஆயுதங்களையும் உடனடியாக காவல் நிலையத்தில்ஒப்படைக்குமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தேவகோட்டை அருகே உள்ளது கண்டதேவி கிராமம். இங்குள்ள கோவிலில் ஆண்டுதோறும் தேர்த் திருவிழா நடைபெறுவது வழக்கம்.தாழ்த்தப்பட்ட மக்களும், தேவர் இன மக்களும் சேர்ந்து இந்த திருவிழாவை எந்தவித பிரச்சினையும் இன்றி கொண்டாடி வந்தனர்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கோவில் தேர்த் திருவிழாவை நடத்துவதில் பிரச்சினை ஏற்பட்டது. துப்பாக்கிச் சூடு வரை இது சென்றது.உயிர்ப் பலிகளுக்கு அஞ்சி தேர்த் திருவிழா பல ஆண்டுகளாக நடக்காமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் கண்டதேவி தேர்த் திருவிழாவை மீண்டும் நடத்துவது குறித்து மாநில இந்து அறநலையத்துறை அமைச்சர் பி.சி.ராமசாமிதலைமையில் சமீபத்தில் சமாதானப் பேச்சுவார்த்தை நடந்தது.
இதையடுத்து வரும் திங்கள்கிழமை தேர்த் திருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதனால் தேவகோட்டை மற்றும் சாக்கோட்டை பகுதிகளில் உரிமம் பெற்று வைத்துள்ள துப்பாக்கி உள்ளிட்ட அனைத்து வகைஆயுதங்களையும் தேவகோட்டை காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தேவகோட்டை, சாக்கோட்டை மற்றும் அருகிலுள்ள கண்டதேவிக்கு அருகிலுள்ள பகுதிகளில் வரும் திங்கள்கிழமை உள்ளூர்விடுமுறை அளிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications