பழி வாங்குவதே அரசுக்கு வேலையாகிவிட்டது: இளங்கோவன்
கோயம்புத்தூர்:
முதல்வர் ஜெயலலிதாவின் ஊழல்களை சட்டசபையில் புள்ளி விவரங்களுடன் ஸ்டாலின் குறிப்பிட்டுப் பேசியதால்தான் அவரது மேயர் பதவியைப் பறிக்க அரசு சட்டம் கொண்டு வரப்பட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் கூறினார்.
கோவையில் நிருபர்களிடம் பேசிய அவர்,
பழி வாங்கும் நடவடிக்கைகளில் தான் தமிழக அரசு அக்கறை செலுத்தி வருகிறது.
சைதாப்பேட்டை தொகுதியில் 53 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடத்த மாநில தேர்தல் ஆணையர்மிருத்யுஞ்சய் சாரங்கி பரிந்துரை செய்ததால் அவரை பதவியில் இருந்து நீக்க தமிழக அரசு முயன்றது.
இது தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு ஜெயலலிதா கடிதம் எழுதினார். சாரங்கியைத் தூக்கிவிட்டு இவரைப்போடுங்கள் என்று ஒருவரது பெயரையும் பரிந்துரை செய்தார்.
ஆனால், ஜெயலலிதாவின் கோரிக்யைை தேர்தல் கமிஷன் நிராகரித்துவிட்டது. ஜெயலலிதாவின் இந்தச் செயல்இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த நெறிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது.
முறைகேடு நடந்ததால் மறு தேர்தல் நடத்தச் சொன்னார் சாரங்கி. இது தவறா? உடனே அவரை மாற்றி பழி வாங்கத்துடிக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.
நான் நேற்றே சொன்னது போல கராத்தே தியாகராஜன் போன்றவர்கள் மேயராகப் பதவியேற்றதன் மூலம் இனிரெளடிகள் மேயராகலாம் என்ற கேவலமாக நிலைமை உருவாகிவிட்டது.
காங்கிரஸ்- த.மா.கா. இணைந்த பிறகு இரு கட்சிகளிலும் உள்ள கருத்து வேறுபாடுகள் மறையும் என்றார்இளங்கோவன்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications