அயோத்தி: வி.எச்.பி, பாஜக ஒதுங்கிக் கொள்ள ஜெயேந்திரர் யோசனை
சென்னை:
அயோத்தி பிரச்சனை தீர வேண்டுமானால் வி.எச்.பி., பா.ஜ.க., அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள் ஆகியோர்முதலில் அந்த விவகாரத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என காஞ்சி காமகோடிப் பீடத்தின்சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர்,
நான் 23ம் தேதி மாலை டெல்லி செல்கிறேன். நேபாள தூதரின் அலுவகத்தில் 24ம் தேதியும் மறு நாளும் நடக்கும்நிகழ்ச்சிகில் பங்கேற்கிறேன். பாரத் மைதிரி சங்கம் என்ற அமைப்பை துவக்கி வைக்கிறேன்.
நேபாள மன்னரின் அழைப்பை ஏற்று செல்கிறேன். அப்போது டெல்லி வரும் அயோத்தி முஸ்லீம் தலைவர்களுடன்பேச்சு நடத்துவேன்.
இந்தப் பிரச்சனை இவ்வளவு குழப்பம் அடைந்ததற்குக் காரணம் அரசியல்வாதிகள் தான். இது மதம் சம்பந்தபட்டபிரச்சனை. இதை இந்து- முஸ்லீம் மதத் தலைவர்கள் பேசித் தீர்ப்பது தான் உகந்தது.
இதனால் விஸ்வ ஹிந்து பரிஷத், பாரதீய ஜனதா கட்சியினர் உள்பட அனைத்து அரசியல்வாதிகளும் முதலில் இந்தவிவகாரத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும். பத்திரிக்கைகள், டிவிக்காரர்களும் ஒதுங்கி நிற்க வேண்டும்.இவர்கள் ஒதுங்கினாலே போதும், பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கண்டுவிடலாம்.
நான் ஏற்கனவே இதற்கு ஒரு பார்முலா கூறியிருக்கிறேன். அதை இரு மதத்தினரும் வரவேற்றனர். அந்தஅடிப்படையில் தான் அயோத்தி விவகாரத்தை தீர்க்க முடியும். நான் இப்போது போய் உடனே இந்த பிரச்சனையைதீர்க்கப் போகிறேன் என்று சொல்லவில்லை. இது மாதிரி பலமுறை பேச்சு நடத்தினால் தான் தீர்வை எட்ட முடியும்.
அப்துல் கலாமை ஜனாதிபதியாக்குவது மிகச் சிறந்த முடிவாகும். தத்துவமும் அறிவியலும் ஒன்றிணைந்த அவர்ஜனாதிபதியாவது நாட்டின் வளத்துக்கு நல்லது.
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களை பராமரிப்பது குறித்து எனது தலைமையில் ஒரு ஆலோசனைக் குழுவைமாநில அரசு நியமித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவை நான்நியமிக்க உள்ளேன்.
12 வருடங்களுக்கும் மேலாக கும்பாபிஷேகம் நடத்தப்படாத கோவில்ககளில் அதை நடத்த முக்கியத்துவம்கொடுக்க உள்ளோம். அந்தக் கோவில்களில் தினந்தோறும் பூஜை நடத்தவும் முயற்சி எடுக்கப்படும்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கோவில்களில் குழந்தைகளுக்கு நற் பண்புகளை போதிக்கும் பாடங்களும்,வழிபாட்டு பாடல்களும் சொல்லித் தர வேண்டும். இதன்மூலம் மாணவர்கள் இடையே ஒழுக்கத்தை கற்பிக்கமுடியும் என்றார் சுவாமிகள்.
டெல்லி செல்லும் அவர் அங்குள்ள காமாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் விஷேச நிகழ்ச்சியிலும் பங்கேற்கஉள்ளார்.












Click it and Unblock the Notifications