ஸ்டாலின் ஊர்வலத்துக்கு புதிய கட்டுப்பாடுகள்
சென்னை:
மேயர் பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ள ஸ்டாலின் பொது மக்களுக்கு நன்றி தெரிவிக்க அனுமதி தரப்பட்டுள்ளது. ஆனால், பலவிதகட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டுப்பாடுகளை மீறி ஸ்டாலின் நடந்து கொண்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸார்எச்சரித்துள்ளனர்.
மேயர் பதவியிலிருந்து தான் அகற்றப்பட்டது குறித்து விளக்கவும், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் சென்னை நகரின் சட்டசபைத்தொகுதிகளில் ஊர்வலமாக செல்ல ஸ்டாலின் முடிவு செய்திருந்தார். அதற்கான பகுதிகளும் அறிவிக்கப்பட்டிருந்தன. வியாழக்கிழமைமாலை பெரம்பூர் பகுதியில் இந்த நிகழ்ச்சி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ஸ்டாலினின் இந்த நிழ்ச்சிக்கு அனுமதி அளிக்க போலீஸார் மறுத்து விட்டனர். பொது இடங்களில் ஊர்வலம் செல்ல கோர்ட் தடைவிதித்திருப்பதாலும் சென்னையில் தடையுத்தரவு அமலில் இருப்பதாலும் அனுமதி தர போலீஸார் மறுத்து விட்டதாக கமிஷனர்விஜயக்குமார் கூறினார்.
இதனால் நேற்று புரசைவாக்கத்தில் ஸ்டாலின் நடத்த இருந்த ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது.
இருப்பினும் இன்று ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு சில கட்டுப்பாடுகளுடன் போலீஸ் அனுமதி கொடுத்தனர். இனறு அவர் பெரம்பூர் பகுதியில்ஊர்வலம் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
பெரம்பூர் பகுதியில் சுமார் 2 மணி நேரம் மட்டுமே நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை நடத்தலாம் என்று போலீசார் கட்டுப்பாடுவிதித்துள்ளனர். மேலும் நான்கு சக்கர வாகனத்தில் மட்டுமே ஸ்டாலின் செல்ல வேண்டும். வாகனத்தில் மைக், ஒலிபெருக்கி ஆகியவைபொருத்தியிருக்கக் கூடாது என்று போலீஸார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.
மேலும் பெரம்பூர் பகுதியில் அவர் செல்ல வேண்டிய தெருக்களையும் போலீஸாரே குறிப்பிட்டுக் கொடுத்துள்ளனர். மாலை 5 மணி முதல்இரவு 7 மணி வரை மட்டுமே ஸ்டாலினுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
முதலில் போலீஸ் தடையை மீறி செல்லப் போவதாக அறிவித்திருந்த திமுக பின்னர் போலீஸாருடன் ஒத்துழைக்க விரும்புவதாக கூறி இன்றுநடக்க இருந்த பெரம்பூர் நிகழ்ச்சியை 23ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
மற்ற பகுதிகளில் திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடைபெறும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசாரின் கட்டுப்பாடுகளுக்குஉட்பட்டுத் தான் இந்த நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications