சன் டிவி நிருபர், கேமராமேன் மீது தாக்குதல்: பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம்
சென்னை:
சன் நிருபர் தாக்கப்பட்டதற்கு சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஸ்டாலினின் மேயர் பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் சாலை மறியல் உள்ளிட்டபோராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
நேற்று சென்னை கத்திப்பாரா சந்திப்பில் நேரு சிலை அருகே மறியலில் ஈடுபட்டிருந்த திமுகவினரை போலீசார்தடியடி நடத்தி கலைத்தனர். அதைப் படம் பிடித்துக் கொண்டிருந்த சன் டிவியின் கேமராமேனை செங்கல்பட்டுகிழக்கு மாவட்ட எஸ்.பி. பொன். மாணிக்கவேல் தடுத்தார்.
இதைத் தட்டிக் கேட்ட சன் டிவியின் நிருபருக்கு அடி- உதை விழுந்தது. பின்னர் கேமராவைப் பறித்துச் சென்றஎஸ்.பி. அதிலிருந்த கேச்டை எடுத்துக் கொண்டு கேமராவைத் திருப்பித் தந்தார். அதைத் தடுத்த கேமராமேனுக்கும்அடி விழுந்தது.
அந்த கேசட்டை 6 மணி கழித்து சன் டிவி அலுவலகத்துக்கு போலீசார் அனுப்பினர். ஆனால், அதில் பொன்.மாணிக்கவேல் கேமராமேனின் அருகில் வரும் காட்சி மட்டுமே உள்ளது. தடியடி உள்ளிட்ட போலீஸ் காட்சிகள்அழிக்கப்பட்டிருந்தன.
அந்த கேசட்டில் மிச்சம் மீதியிருந்த காட்சிகளை இன்று சன் டிவி ஒளிபரப்பியது. அதில், பொன். மாணிக்கவேலிடம்ஒரு மப்டி உடையில் இருக்கும் போலீஸ்காரர் சன் டிவி கேமராமேனைக் காட்டுகிறார். உடனே பொன்.மாணிக்கவேல் புலிப் பாய்ச்சலில் ஓடி வந்து கேமராவை நிறுத்தச் சொல்கிறார்கள்.
அவரிடம் கேள்வி கேட்கும் நிருபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இந்தக் காட்சிகள் மட்டும் தான் அதில்உள்ளன.
இந் நிலையில் சன் டிவி நிருபர், கேமராமேன் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை நிருபர்கள் சங்கம் தீர்மானம்நிறைவேற்றியுள்ளது.
பத்திரிக்கை சுதந்திரத்தை போலீசார் பறித்து வருவதாக ஜனாதிபதி, பிரதமர், ஆளுநருக்கும் பத்திரிக்கையாளர்கள்தந்திகளை அனுப்பியுள்ளனர்.
பத்திரிக்கையாளர்களைத் தாக்கிய பொன்.மாணிக்கவேலை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றும் அதில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications