முன்னாள் த. செயலாளர் சங்கருக்கு தமிழக அரசு கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் சங்கருக்கும் தமிழக அரசுக்கும் இடையிலான பிரச்சனை மீண்டும்பரபரப்புக்குள்ளாகியுள்ளது.

சமீபத்தில் தமிழக தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து விலகிய சங்கர் இப்போது மத்திய திட்டக் கமிஷனின்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சசிகலா கும்பலின் தொல்லை தாங்காமல் தான் அவர் தலைமைச் செயலாளர் பதவியைவிட்டு விலகினார். ஆனால்,இதை அவர் மறுத்து பேசாமல் இருந்து வருவதற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

தலைமைச் செயலாளராக இருந்த அவரையே முதல்வரைச் சந்திக்க விடாமல் வாசலில் நிறுத்தினர் சில சசிகலாஆதரவு அதிகாரிகள். அதே போல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா கூறிய சிலகருத்துக்களாலும் புண்பட்டுப் போன சங்கர் தான் பதவி விலகிக் கொள்வதாக கூறி விலகினார்.

முதலில் அவரை விடுவிக்க மறுத்த அரசு பின்னர் விடுவித்தது. வி.ஆர்.எஸ். வாங்கிக் கொண்டு ஒதுங்கிக் கொள்ளதிட்டமிட்டிருந்த அவர் தனது மனதை மாற்றிக் கொண்டு மத்திய அரசுப் பணியில் சேர முடிவெடுத்தார்.

பிரதமருக்கு மிக நெருக்கமான மடத்தின் தலைவரின் ஆசி சங்கருக்கு உள்ளது. இது தவிர முன்னாள் ஜனாதிபதிஆர்.வெங்கட்ராமனுக்கும் வேண்டியவர் சங்கர். இதனால் டெல்லியில் அவருக்கு செல்வாக்கு உண்டு. தனதுசெல்வாக்கைப் பயன்படுத்தி அவர் மத்திய அரசுப் பணிக்குச் சென்றுள்ளார்.

அவருக்கும் சமூகரீதியில் சசிகலாவின் செல்வாக்கு பெற்ற சில அதிகாரிகளுக்கும் இருந்த வந்த பிரச்சனைகள்குறித்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதனை சங்கர் மறுக்கவில்லை. அமைதியாக இருந்து வருகிறார்.இதனால், இந்தச் செய்திகளில் உண்மை இருப்பதை அவர் மெளனமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

இந் நிலையில் சங்கரை கண்டித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் முதல்வர் ஜெயலலிதாகூறியிருப்பதாவது:

கடந்த மே மாதம் 16ம் தேதி சொந்த காரணங்களுக்காக வி.ஆர்.எஸ். பெறுவதாக சங்கர் கடிதம் கொடுத்தார். அதில்,90 நாள் பணியில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தக் கோரியிருந்தார்.

ஜூன் 23ம் தேதி வரை விடுப்பு தருமாறு ஜூன் 10ம் தேதி கடிதம் தந்தார்.

இதற்கிடையே ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஜூன் 14ம் தேதி ஒரு கடிதம் தந்தார்.அதில் 90 நாட்கள் தொடர்ந்து பணியில் இருக்க விரும்புவதாகவும், நோட்டீஸ் பிரீயடை தளர்த்த வேண்டாம்என்றும் கோரினார்.

அதன்படி ஆகஸ்ட் 17ம் தேதி வரை பணிபுரிவதாக அவர் கூறியிருந்தார். இதை அரசு ஏற்ரது. ஆனால், ஜூன் 21ம்தேதி வி.ஆர்.எஸ். தொடர்பாக தனது நிலையை மாற்றி இன்னொரு கடிதம் தந்தார்.

ஜூன் 12ம் தேதி டெல்லியில் பிரதமர் வாஜ்பாயை நான் (ஜெயலலிதா) சந்தித்தேன். அப்போது சங்கருக்கு மத்தியஅரசுப் பதவி தருவதில் ஏதாவது ஆட்சேபனை உள்ளதா என்று பிரதமர் என்னிடம் கேட்டார்.

நான் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று கூறினேன். இதனால் தான் சங்கருக்கு மத்திய அரசுப் பதவிகிடைத்தது என்று ஜெயலலதா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+